மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 16 ஜன 2018

பிரவீன் தொகாடியா தலைமறைவு: குஜராத்தில் வன்முறை!

பிரவீன் தொகாடியா தலைமறைவு: குஜராத்தில் வன்முறை!

விஹெச்பி தலைவர் பிரவீன் தொகாடியா தலைமறைவானதைத் தொடர்ந்து, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் குஜராத்தில் வன்முறையில் ஈடுபட்டனர்.

கடந்த 2015ஆம் ஆண்டு அவதூறு ஏற்படுத்தும்விதமாகப் பேசியதாக விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவர் பிரவீன் தொகாடியா மீது ராஜஸ்தான் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் அவரை கைது செய்வதற்காக ராஜஸ்தான் மாநில போலீஸார் நேற்று (ஜனவரி 15) குஜராத் வந்தனர். குஜராத் காவல் துறையுடன் பிரவீன் தொகாடியா இல்லத்துக்குக் காவல் துறையினர் சென்றனர். ஆனால், அதற்குள் அவர் தலைமறைவாகி விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அவரைப் பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிரமாகத் தேடிவருவதாகக் காவல் துறையினர் கூறினர்.

இதையடுத்து உடனடியாக விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் வன்முறையில் இறங்கி குஜராத்தில் உள்ள நெடுஞ்சாலைகளை மறிக்கத் தொடங்கிவிட்டனர். தொகாடியாவை போலீஸார் கைது செய்தததாகக் கூறி, சோலா காவல் நிலையத்தை முற்றுகையிட்டும் அவர்கள் கோஷமிட்டனர். ஆனால், தாங்கள் தொகாடியாவைக் கைது செய்யவில்லை என்று காவல் துறையினர் தெரிவித்துவிட்டனர்.

ஜனவரி 13, 14, 15 ஆகிய தேதிகளில் குஜராத்தில் ‘ஆதிவாசிகள் மாநாடு’ நடைபெற்றது. இந்த மாநாட்டுக்காக ஒரு லட்சத்துக்கும் மேலான ஆதிவாசிப் பழங்குடியின மக்கள் அணிதிரண்டு வந்துள்ளார்கள். அவர்களுக்குத் தோழமை காட்ட ஜார்கண்ட், சட்டிஸ்கர், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் நூற்றுக்கணக்கில் ஆதிவாசிகள் வந்துள்ளனர். அதுதவிர, ராஜஸ்தான், ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களிலிருந்தும் மாநாட்டுக்காக வந்துள்ளனர்.

விஸ்வ ஹிந்து பரிஷத் தொண்டர்கள் தங்கள் தலைவருக்காக நடத்தும் வன்முறையால் மூன்று நாள்கள் ஆதிவாசிகள் மாநாட்டுக்கு வந்திருக்கும் மக்கள் திரும்பிச் செல்ல போக்குவரத்துப் பிரச்னை உருவாகியுள்ளது. அப்படி நிர்க்கதியாகி நிற்கும் மற்ற மாநில ஆதிவாசிகளை, குஜராத் ஆதிவாசிகள் தலைவர்கள், அமர்சிங் பாய் சவுத்ரி, அசோக் சவுத்ரி ஆகியோரைத் தொடர்பு கொள்ளும்படி, ஆதிவாசிகள் மாநாட்டு விழாக்குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று இரவு அகமதாபாத் அருகிலுள்ள சாஹிபாக் பகுதியில் தொகடியா சுயநினைவற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் அகமதாபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

செவ்வாய் 16 ஜன 2018