மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 16 ஜன 2018

முகத்தைப் பதிவு செய்ய ஆதார் ஆணையம் முடிவு!

முகத்தைப் பதிவு செய்ய ஆதார் ஆணையம் முடிவு!

அனைத்து ஆதார் அட்டைதாரர்களின் முகத்தையும் அடையாளச் சான்றாக ஸ்கேன் செய்து பதிவு செய்ய ஆதார் ஆணையம் முடிவு செய்துள்ளது.

பல்வேறு அரசு நலத் திட்டங்களைப் பெற ஆதார் எண்ணை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. ஆனால், ஆதார் அட்டைகளில் உள்ள பிழைகளைத் திருத்தம் செய்ய அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் புகார் வந்ததைத் தொடர்ந்து, 2017 ஜனவரி முதல் மார்ச் வரை மூன்று மாதங்களில் 1,000 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அதேபோல், சட்ட விரோதமாக ஆதார் தகவல்களைத் திருடியதாக எட்டு இணையதளங்கள் மீது ஆதார் ஆணையம் டெல்லி காவல் துறையில் புகார் அளித்தது. தனிநபர்களின் ஆதார் தகவல்களைத் திருடும் நபர்களுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை வழங்கப்படும். மாநில அரசுகளின் பல்வேறு துறைகளில் இயங்கும் இணையதளங்களை ஆய்வு செய்து தனி நபர்களின் ஆதார் எண், வங்கி கணக்கு விவரங்கள் ஆகியவை கசிகிறதா என்பதைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தது.

டிசம்பர் 30ஆம் தேதி, ஆதார் விவரங்களைப் பதிவு செய்வதில் விதிமீறல் செய்த 50,000 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அவர்களில் 20 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தி டிரிபியூன் இந்தியாவின் பத்திரிகையளர் 500 ரூபாய்க்கு பிறரின் ஆதார் விவரங்கள் விற்கப்படுவதாகத் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, ஆதாரில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களைச் சேர்க்க ஆதார் ஆணையம் நடவடிக்கை எடுத்தது. 'விர்ச்சுவல் ஐடி' என்ற புதிய பாதுகாப்பு நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், ஆதார் அட்டை வைத்திருக்கும் ஒவ்வொருவரின் முகத்தையும் கூடுதல் அடையாளச் சான்றாக பதிவு செய்யப்போவதாக ஆதார் ஆணையம் அறிவித்துள்ளது. வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் இந்தப் பணி தொடங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

செவ்வாய் 16 ஜன 2018