மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 15 ஜன 2018

ஹெல்த் ஹேமா: பழங்களைச் சாப்பிடுவோமா?

ஹெல்த் ஹேமா: பழங்களைச் சாப்பிடுவோமா?

வீட்டுக்கு வரும் விருந்தினர்கள் தற்போதெல்லாம் பழங்களையே அதிகம் வாங்கி வருகின்றனர். எவ்வளவுதான் ஸ்நாக்ஸ், ஸ்வீட்ஸ் என்று புதிது புதிதாக வந்தாலும் பழங்களின் பக்கம் திரும்பி ஆரோக்கியத்தின் வழி செல்ல ஆரம்பித்துவிட்டனர். காரணம் என்ன தெரியுமா? நாம்தான்.

நாம் பிறர் வீட்டுக்குச் செல்லும்போது பழங்களை வாங்கிச்சென்று அதன் காரணத்தை அறிவுறுத்த, பிறரும் அதையே செய்கின்றனர். வாழிய நலம். பழங்களை எப்படியெல்லாம் சாப்பிடலாம்?

* பழங்களைக் கடித்துச் சாப்பிடுவதே சிறந்தது. முன் பற்களில் மட்டும் கடித்து உடனே விழுங்கிவிடக் கூடாது. அனைத்துப் பற்களிலும் பழங்கள் படுமாறு நன்றாக வாயில் அரைத்து விழுங்க வேண்டும்.

* ஆப்பிள், பேரிக்காய், கொய்யா போன்றவற்றை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். மென்று சாப்பிடும்போது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் அனைத்தும் கிடைக்கும்.

* பழங்களை ஜூஸாக அருந்துவதைக் கூடுமானவரை தவிர்க்க வேண்டும். உடல்நலம் குன்றியவர்கள், பழங்களைச் சாப்பிட மறுக்கும் குழந்தைகள், மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள், முதியவர்கள் ஜூஸாகச் சாப்பிடலாம்.

* பழங்களை ஜூஸாக்கும்போது, நார்ச்சத்துகள் அகன்றுவிடும். மேலும், நுண்ணூட்டச் சத்துகளும் கிடைக்காது.

* பழங்களை நறுக்கிச் சாப்பிட விரும்புபவர்கள், பெரிதாக நறுக்கிச் சாப்பிட வேண்டும். சிறியதாக நறுக்கிச் சாப்பிடக் கூடாது.

* பழங்களின் விதைகளை நேரடியாக விழுங்கக் கூடாது. எனவே, பப்பாளி, ஆப்பிள், திராட்சை முதலான பழங்களில் இருக்கும் கொட்டைகளைத் துப்பிவிட வேண்டும்.

எப்போது சாப்பிட வேண்டும்?

* பொதுவாக, பழங்களை உணவுடன் சேர்த்துச் சாப்பிடக் கூடாது.

* உணவுடன் சேர்த்துச் சாப்பிடும்போது, பழங்கள்தான் முதலில் ஜீரணம் ஆகும். உணவு, அரைமணி நேரம் கழித்துத்தான் ஜீரணம் ஆகும். இதனால், செரிமான மண்டலம் பாதிக்கப்படும்.

சாப்பிட்டவுடன் வாழைப்பழம் சாப்பிடுவது தவறான பழக்கம். ஆரம்ப கட்டத்தில் எந்தவிதத் தொந்தரவுகளும் வராது. தினமும் உணவு உண்ட பிறகு வாழைப்பழம் சாப்பிடுவது தொடர்ந்தால், படிப்படியாகச் செரிமான மண்டலம் பாதிப்படையும்.

* உணவு உண்பதற்கு முன்னர் பழங்களைச் சாப்பிட வேண்டும். பழங்களைச் சாப்பிட்ட அரைமணி நேரத்துக்குப் பிறகு, உணவு உட்கொள்வது நல்லது.

* நன்றாகப் பசிக்கும்போது பழம் சாப்பிடுவது உடனடி எனர்ஜி தரும். அதன்பின்னர் அரைமணி நேரம் கழித்து உணவைச் சாப்பிடலாம்.

* ஓர் உணவு வேளைக்கும் இன்னோர் உணவு வேளைக்கும் இடைப்பட்ட நேரத்தில் பழங்களைச் சாப்பிடுவது மிகவும் நல்லது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

திங்கள் 15 ஜன 2018