மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 15 ஜன 2018

டிஜிட்டல் திண்ணை: எம்எல்ஏவை மிரட்டிய எடப்பாடி

டிஜிட்டல் திண்ணை: எம்எல்ஏவை மிரட்டிய எடப்பாடி

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. “உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!” மெசேஜ் வாட்ஸ் அப்பில் இருந்து வந்து விழுந்தது. தொடர்ந்து அடுத்த மெசேஜ்ஜும் வந்தது. “பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. கடந்த இரண்டு நாட்களாகவே சேலத்தில் மையம் கொண்டிருக்கிறார் முதல்வர். சேலம் ரயில் நிலையத்துக்கு மிக அருகே இருக்கிறது நெடுஞ்சாலை நகர். இங்கேதான் எடப்பாடி பழனிசாமியின் வீடு இருக்கிறது. கட்சி நிகழ்ச்சிகள், அரசு நிகழ்ச்சிகள் என சேலத்தைச் சுற்றிச் சுற்றி பங்கேற்று வருகிறார் பழனிசாமி. பொங்கல் நாளில் பழனிசாமிக்கு வாழ்த்துச் சொல்ல ஏராளமான நிர்வாகிகள் அவரது வீட்டுக்கு வர ஆரம்பித்தனர். வந்த எல்லோரையும் முதல்வரைப் பார்க்க அனுமதிக்கவில்லை. எடப்பாடிக்கு ஆல் இன் ஆல் ஆக இருக்கக் கூடிய ஆத்தூர் இளங்கோவன் தான் விசிட்டர்ஸ்களை பில்டர் செய்து அனுப்பிக் கொண்டிருந்தார். இளங்கோவன் கண் அசைப்பவர்கள் மட்டுமே எடப்பாடியை பார்க்க முடிந்தது. மற்ற யாருக்கும் வீட்டுக்குள் அனுமதி இல்லை.

கோவை, ஈரோடு, நீலகிரி, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள எம்.எல்.ஏக்களும் முதல்வரைப் பார்க்க, சேலத்துக்கு வந்தார்கள். அவர்கள் எல்லோருக்குமே உடனே அனுமதி வழங்கப்பட்டது. கோவை மாவட்டத்தில் இருந்து வந்த எம்.எல்.ஏ. ஒருவர், எடப்பாடிக்கு வேஷ்டி, சட்டையும், கோவையில் இருந்து ஸ்பெஷல் சுவீட் ஒன்றும் வாங்கி வந்திருக்கிறார். அதையெல்லாம் வாங்கிக் கொண்ட எடப்பாடி, ‘கோவை மாவட்டத்துல சில எம்.எல்.ஏ.க்கள் கடந்த வாரத்தில் தினகரனை போய் பார்த்திருக்காங்க. அவங்க யாரு என்ன என்ற விபரங்கள் எல்லாம் என் கைக்கு வந்துடுச்சு. என்கிட்ட நல்லவங்க மாதிரி நடிச்சுகிட்டு தினகரனையும் போய் பார்த்துட்டு இருக்காங்க. ஒன்று எனக்கு லாயலா இருக்கணும். இல்லைன்னா தினகரனுக்கு லாயலா இருக்கணும். இங்கே இருக்கலாமா இல்லை அங்கே போகலாமானு யோசிக்கிறவங்களை நாம ஏன் கூட வெச்சிருக்கணும்? அவங்களை எல்லாம் களை எடுக்கணும். எனக்கு தெரியாதுன்னு இதை செய்யுறாங்க... எனக்கு எல்லாம் தெரியும்!’ என்று சொன்னாராம் எடப்பாடி. அதைக் கேட்ட அந்த எம்.எல்.ஏ. பதில் எதுவும் சொல்லாமல், தலையை மட்டும் ஆட்டிவிட்டு எடப்பாடிக்கு பொங்கல் வாழ்த்துக்களை சொல்லிவிட்டுப் புறப்பட்டுவிட்டாராம். காரணம், தினகரனை சென்று பார்த்தவரே அந்த எம்.எல்.ஏ. தானாம்! இப்படியாக தன்னைப் பார்க்க வந்த எம்.எல்.ஏக்களிடம் எல்லாம் எச்சரிக்கும் தொணியில்தான் பேசி இருக்கிறார்.

‘அவரு ஏதோ ஸ்லீப்பர் செல் வெச்சிருக்கேன்னு சொல்லிட்டு இருக்காருதானே... இங்கே வந்ததுல யாரும் அந்த ஸ்லீப்பர் செல்லாக இருப்பாங்க இல்ல.. அவங்க போய் சொல்லட்டும்! எடப்பாடி யாரையும் பார்த்துப் பயப்படாம இருக்கேன்னு! ‘ என்று தனக்கு வேண்டப்பட்டவர்களிடம் மட்டும் சொல்லி சிரித்தாராம் எடப்பாடி. “ என்று முடிந்தது அந்த மெசேஜ்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

திங்கள் 15 ஜன 2018