சசிகுமாருக்கு ஜோடியாகும் அஞ்சலி


நாடோடிகள் படத்தின் இரண்டாம் பாகத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
2009ம் ஆண்டு சமுத்திரகனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படத்தில் அனன்யா, பரணி, விஜய் வசந்த், உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். நட்பு, காதல், காமெடி என உருவாகியிருந்த இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இன்ஸ்பைர் எண்டர்டெயின்மெண்ட் மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்க உள்ள இப்படத்தின் பணிகள் தொடங்கி நடைபெற்றுவருகிறது.
இந்தப் படத்தின் நாயகியாக அஞ்சலி நடிக்கவுள்ளதும் முதல் பாகத்தில் நடித்த பரணி மற்றும் சிலர் நடிப்பதும் உறுதியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பை சமுத்திரக்கனி தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் முதல் துவங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.