மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 15 ஜன 2018

இந்தியாவின் ஜிடிபி உயரும்!

இந்தியாவின் ஜிடிபி உயரும்!

2020 முதல் 2022ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) தோராயமாக 7.3 சதவிகித வளர்ச்சியடையும் என்று மோர்கன் ஸ்டான்லி ஆய்வு கூறுகிறது.

இந்த ஆய்வில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: 'இந்தியாவின் ஒட்டுமொத்த கொள்கைகள் உற்பத்தியை அதிகரிக்கும். இது பொருளாதார சிரமங்களை எதிர்கொள்ள உதவும். 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களால் ஏற்பட்ட மந்த நிலையிலிருந்து இந்தியப் பொருளாதாரம் 2018ஆம் ஆண்டில் மீண்டு வரும்.

தனியார் நிறுவனங்களில் முதலீடுகள் 2018ஆம் ஆண்டில் அதிகரிக்கத் தொடங்கும். வலுவான பொருளாதார அமைப்பு முதலீட்டுக் கடன் தேவையை ஏற்படுத்தும். ஒட்டுமொத்தமாக 2018ஆம் ஆண்டில் பொருளாதாரம் மீண்டுவரும். 2017ஆம் ஆண்டில் உண்மையான ஜிடிபி 6.4 சதவிகிதமாக இருந்தது. இது 2018ஆம் ஆண்டில் 7.5 சதவிகிதமாக அதிகரிக்கும். 2019ஆம் ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி மேலும் அதிகரித்து 7.7 சதவிகிதமாக உயரும்.'

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

திங்கள் 15 ஜன 2018