மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 15 ஜன 2018

டிராவிட் பெருமை பேசும் கார்ட்டூன் புக்!

டிராவிட் பெருமை பேசும் கார்ட்டூன் புக்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் பற்றி "த வால்" (The Wall) என்கிற கார்ட்டூன் புத்தகம் ஒன்று வெளியாகியுள்ளது.

சென்னை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், 19 வயதுக்குக் கீழான இந்திய 'ஏ' அணியின் தற்போதைய தலைமை பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் பற்றிய இந்த கார்ட்டூன் புத்தகத்தை "ஸ்போட்வாக்" என்கிற நிறுவனம் இணையதளத்தில் தற்போது வெளியிட்டுள்ளது.

இந்தப் புத்தகம் பற்றியும், இதனைப் பதிப்பித்த நோக்கம் பற்றியும் இந்தப் புத்தகத்திலுள்ள கார்ட்டூன் படங்கள் அனைத்தையும் வரைந்துள்ள வரைகலை கலைஞர், பொறியியலாளர் அதீதன் பிபிசிக்கு அளித்துள்ள பேட்டியில், "நானும், என்னுடைய இணை நிறுவனரான திவாகரும் டிராவிட்டின் ரசிகர்கள். எனவே, கிரிக்கெட் வீரர் டிராவிட்டை பெருமைப்படுத்தும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. ராகுல் டிராவிட் ரசிகர் மன்றத்தோடு கடந்த ஆண்டு கிடைத்த தொடர்பைப் பயன்படுத்தி எங்களுடைய கருத்தை நனவாக்கியுள்ளோம்,அதன் மூலம் கிரிக்கெட் வீரர் டிராவிடின் மிகவும் சிறந்த 15 நிகழ்வுகளை ஆய்வு செய்து தேர்ந்தெடுத்து, அவற்றை காமிக் வடிவில் இந்தப் புத்தகத்தில் வழங்கியுள்ளோம். டிராவிட்டின் முதல் கிரிக்கெட் போட்டி, முதல் சதம், மிகவும் முக்கிய கிரிக்கெட் ஆட்டங்கள் போன்ற முக்கிய நிகழ்வுகள் இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

திங்கள் 15 ஜன 2018