மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 15 ஜன 2018

கோலியின் ஆட்டம் தொடருமா?

கோலியின் ஆட்டம் தொடருமா?

தென்னாப்பிரிக்க - இந்திய அணிகளுக்கு இடையே நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்களைச் சேர்த்துள்ளது.

தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் (ஜனவரி 13) தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட் செய்தது. முதல் இன்னிங்ஸில் 335 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதன்பின்னர் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் முரளி விஜய் மற்றும் கே.எல். ராகுல் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால், கே.எல்.ராகுல் 10 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் சித்தேஷ்வர் புஜாரா முதல் பந்திலேயே ரன் ஓட முயற்சித்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

பின்னர் களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, விஜய் உடன் ஜோடி சேர்ந்து விளையாடி இந்திய அணியைச் சரிவிலிருந்து மீட்டனர். இருப்பினும் நிதானமாக விளையாட வேண்டிய டெஸ்ட் போட்டியில் முரளி விஜய் சிறிது நேரத்துக்குப் பின்னர் பொறுமை இழந்ததால், தேவையில்லாமல் 46 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்த ஜோடி 79 ரன்களைச் சேர்த்து அணியைச் சரிவிலிருந்து மீட்டது. ரோஹித் ஷர்மா 10 ரன்கள் மட்டுமே சேர்த்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

நீண்ட நாள்களுக்குப் பின்னர் மீண்டும் அணியில் இடம் கிடைத்துள்ள பார்த்திவ் படேல் களமிறங்கினர். ஆனால், அவரும் நிலைத்து நின்று விளையாட தவறியதால் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் நிலைத்து நின்று விளையாடிய கோலி அரை சதம் அடித்தார். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்களைச் சேர்த்துள்ளது. கோலி 85 ரன்களுடனும், ஹார்திக் பாண்டியா 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

திங்கள் 15 ஜன 2018