மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 15 ஜன 2018

வேலைவாய்ப்புக்கு கூடுதல் நிதி!

வேலைவாய்ப்புக்கு கூடுதல் நிதி!

வருகின்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென்று வர்த்தக சங்கங்கள் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளன.

2018-19ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் பிப்ரவரி ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. பாஜகவின் ஆட்சிக்காலத்தில் தாக்கல் செய்யப்படும் கடைசி பட்ஜெட் கூட்டத்தொடர் இது என்பதால் இந்த பட்ஜெட் கூட்டத்தொடருக்கு பாஜக அரசு முக்கியத்துவம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாகக் கடந்த இரு ஆண்டுகளாக வேளாண்துறை மற்றும் தொழிற்துறை மத்திய அரசின் நடவடிக்கைகளால் பெருமளவு முடங்கியது.

இந்நிலையில் தொழிற்துறை மற்றும் விவசாயத்துறையை ஊக்குவிக்கும் வகையில் பட்ஜெட் ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. வர்த்தக சங்கங்களும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை அதிகரிக்க கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை மத்திய அரசுக்கு முன்வைத்துள்ளன.

வெளிநாட்டு நிறுவனங்களின் வரவினால் சில்லறை வர்த்தகத்தில் வேலையிழப்புகள் அதிகரித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாகவே வேலையிழப்புகள் அதிகரித்துள்ளது என்றும் முறையிட்டுள்ளன. இதுகுறித்து அனைத்திந்திய வர்த்தக சபையின் பொதுச் செயலாளர் அமர்ஜித் கவுர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், "வேலைவாய்ப்பு உருவாக்கம் அதிகளவில் தேவைப்படுகிறது. பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகுதான் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாகக் கருதுகிறேன். மத்திய அரசின் 100 சதவிகித அந்நிய முதலீடு இந்திய வேலைவாய்ப்பு உருவாக்கத்தை கடுமையாகப் பாதிக்கிறது. எனவே வேலைவாய்ப்பு உருவாக்கத்தை அதிகரிக்க கூடுதல் முதலீடு செய்ய வேண்டியது அவசியமாக உள்ளது" என்றார்.

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

திங்கள் 15 ஜன 2018