மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 15 ஜன 2018

தலைவர்களின் மாட்டுப்பொங்கல்!

தலைவர்களின் மாட்டுப்பொங்கல்!

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக ஆளுநர் பன்வாரிலால் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இன்று மாட்டுப் பொங்கலை கொண்டாடினர்.

பொங்கல் பண்டிகையின் இரண்டாம் நாளான இன்று(ஜனவரி 15) மாட்டுப்பொங்கலாகவும் திருவள்ளுவர் தினமாகவும் கொண்டாடப்படுகிறது. மாட்டுப்பொங்கலையொட்டி பல்வேறு ஊர்களிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டன.

மாட்டுப்பொங்கலை முன்னிட்டு ஆளுநர் பன்வாரிலால் இன்று காலை பட்டினப்பாக்கம் கடற்கரைக்கு வருகை தந்தார். துலுக்கானத்தம்மன் கோவில் மைதானத்துக்குச் சென்றார். அங்கிருந்த பசுக்களுக்கு கீரைக்கட்டு , பொங்கல் கொடுத்து கோமாதா பூஜை நடத்தினார். அவற்றை தொட்டு வணங்கினார். அங்குத் திரண்டிருந்த பொது மக்களைப் பார்த்த ஆளுநர் அனைவருக்கும் ‘அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்’ என்று தமிழில் வாழ்த்தும் தெரிவித்தார்.

இதேபோல் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் இணைந்து மாட்டுப்பொங்கலைக் கொண்டாடினார். இது தொடர்பான புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில், எங்கள் வீட்டு லட்சுமி, அட்சயா , அர்த்தநாரி, மீனாட்சிக்கு சர்க்கரை பொங்கல் ஊட்டி மாட்டுப்பொங்கல் கொண்டாடினோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் சார்பில் அதன் தலைமை அலுவலகமான தாய்மண்ணில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் இதில் கலந்துகொண்டார்.

இதேபோல், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் உட்பட பலரும் மாட்டுப்பொங்கலைச் சிறப்பாக கொண்டாடினர்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

திங்கள் 15 ஜன 2018