மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 15 ஜன 2018

ரஜினிகிட்ட சொல்லிடாதீங்க : அப்டேட் குமாரு

ரஜினிகிட்ட சொல்லிடாதீங்க : அப்டேட் குமாரு

குருமூர்த்தி இருக்கார்ல.. என்னது எந்த குருமூர்த்தியா?.. அதாங்க ஆடிட்டர் குருமூர்த்தின்னு சொல்வாங்களே.. ஜெயக்குமாரை வச்சு தான் இவரை ஞாபகப்படுத்தனும் போலயே. சரி அந்த மேட்டருக்கு போக வேண்டாம். ஆள் தெரியாட்டாலும் பரவாயில்லை, மேட்டரைமட்டும் தெரிஞ்சுக்கங்க. அவரு துக்ளக் நிகழ்ச்சியில பேசும் போது, “ரஜினியும் மோடியும் இணைந்தால் தான் தமிழகம் முன்னேறும்”னு சொல்லியிருக்காப்ள. ஏற்கனவே நம்ம ஆளுங்களுக்கு பாபா முத்திரைக்கு கீழே தாமரை ஏன் வந்துச்சுன்னு கேட்டு பாவம் அந்த மனுசனை தலை சுத்த வச்சுட்டாங்க. இப்ப இவர் வேற ஓப்பனாவே ரூட்டை போட்டு கொடுத்துட்டாரு. அதனால கட்சி ஆரம்பிக்குறதுக்கு முன்னாலயே அவருக்கு பி.பியை ஏத்திவிட்டுருவாங்கன்னு நினைக்குறேன். ஆனால் நம்ம நெட்டிசன்ஸ் என்ன தெரியுமா சொல்றாங்க. ரெண்டு பேரும் இணைஞ்சே வரட்டும்னு சொல்றாங்க. என்னப்பா இது அதிசயம். இவங்க தானப்பா அவங்களை வச்சு செஞ்சாங்க. இப்ப என்னடான்னா சேரட்டும்னு சொல்றாங்களேன்னு பார்த்தா, தனித்தனியா கலாய்க்குறதுக்கு கடுப்பா இருக்குதாம். அதான் ஒன்னா வந்துட்டா வேலையை சுலபமா முடிச்சுடலாம்னு சொல்றாங்க. இதை சொன்னா தலைவருக்கு மறுபடியும் ஒரு நிமிசம் தலைசுத்திருமே.. அய்யோ யாரும் அவர்ட்ட சொல்லிடாதீங்க.

@ansari_masthan

கணவன் : என்ன டின்னர்?

மனைவி : மதியம் மிச்சமான சோத்துல முட்டையை, மிளகுபோட்டு தாளிச்சு வச்சு இருக்கேன்..

கணவன் : எனக்கு பசிக்கலை..

வேறுஒருவீட்டில்:-

கணவன் : என்ன டின்னர்?

மனைவி : பெப்பர் எக் ஃப்ரைட் ரைஸ்..

கணவன் : அட சூப்பர்..

சோறு வைக்கிறது பெருசு இல்லை..

பேரு வைக்கணும்

@pandiprakash

துண்டித்து போன பல்லியின் வால் கூட ஒரு பாடத்தை கற்று தருகிறது, உயிரே போனாலும் போராடுவதை விடாமல்..

@Kozhiyaar

மனைவிக்கு முதலில் ஹீரோவாகவும், போக போக வில்லனாகவும், மகனுக்கு முதலில் வில்லனாகவும் பின்னர் ஹீரோவாகவும் காட்டும் நம் வாழ்க்கை படம்!!!

@manipmp

நோயாளியுடன் வந்தவருக்கு செய்யும் எண்டர்டெயின்மென்ட் தான்.,

ஆஸ்பத்திரி ஹாலில் டி வி வைத்திருப்பது

@chithradevi_91

எல்லாரும் சொல்றாங்களே நாமளும் எதுனா தத்துவம் சொல்லலாம்னு பார்த்தா காலைல சாப்ட பொங்கல் மப்பு ஙே..ன்னு இருக்கு !!!

@கருப்பு கருணா

தீய சக்திகளிடம் எச்சரிக்கையாக இருங்கள் என விஜய்சேதுபதி சொன்னால் பாஜககாரங்க ஏன் டென்ஷன் ஆவுறாங்கோ!

@senthilcp

வளர்மதியின் இலக்கிய பேச்சுக்களை மெய் மறந்து கேட்டதுண்டு - ஈபிஎஸ்

இலக்கே இல்லாத பேச்சு தான் இலக்கிய பேச்சோ என்னவோ?

@ajay_aswa

தமிழ்நாடு மிகப்பெரிய ஆபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது- குருமூர்த்தி

ரஜினி : கொஞ்சம் பொறுங்க என் சிஸ்டத்துல பாத்து சொல்றேன்..

@udhayamass1

தமிழ்நாடு மிகப்பெரிய ஆபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது-

குருமூர்த்தி

ஆமா இவ்வளவு விவரமா பேசுறீயே நீ யார்னே

@manivannan7402

ஜல்லிக்கட்டை மீட்டெடுத்தது மோடியே-தமிழிசை

உங்களை நோட்டா-வுடன் போட்டி போட வைத்தது நாங்களே.

@Kozhiyaar

ராம‌ சுப்ரமணியன் போல் எத்தனை கெட்டப்பில் நான் வந்தாலும், தமிழக மக்கள் போல் கண்டு கொள்ளாமல் ஒதுக்குகிறாள் அவள்!!

@naatupurathan

பாஜகவிற்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளாக தென்சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கோவை, திருப்பூர்,பொள்ளாச்சி, வேலூர், நாகப்பட்டினம், கரூர் பாராளுமன்ற தொகுதிகள் அடங்கிய முதல்பட்டியலை தமிழக பாஜக டெல்லி தலைமைக்கு அனுப்பியுள்ளதாக தகவல்- தினமலர்!

ஐம் வெயிட்டிங் -நோட்டா!

@Kozhiyaar

இப்பெல்லாம் நல்லா சம்பாதிக்கிற பையனை விட, நல்லா சமைக்க தெரிந்த பையனுக்கு தான் மவுசு அதிகம்!!

@கருப்பு கருணா

நான்கு உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்குப் பின்னால் மோடி எதிர்ப்பாளார்கள் உள்ளனர் - குருமூர்த்தி

இது இன்னா பிஸ்கோத்து நைனா..அந்த தலைமை நிதிபதிக்கு பின்னாடி மோடியே கீறாரு வாத்யாரே..அக்காங்பா..

@manipmp

வேலை கிடைத்தபோது ஆசிர்வதிக்கப்பட்டு..

சம்பளம் வாங்கும்போது

சபிக்கப்படுகிறோம்

@Kadharb

குழந்தைக்கு 40ரூபாய்க்கு ஒன்னுமேஇல்லாத கிண்டர்ஜாய் வாங்கி குடுத்துட்டு.

கரும்புக்கு பேரம்பேசற சமூகத்தில் தான் வாழறோம்

@Boopathy Murugesh

ரஜினி பாஜகவுடன் இணைந்தால் தமிழகத்தை காப்பாற்றலாம் - குருமூர்த்தி

அப்பறம் ரஜினிய யாரு காப்பாத்துறது?

-லாக் ஆஃப்

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

திங்கள் 15 ஜன 2018