மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 15 ஜன 2018

ஹெச்.ராஜா மீது போலீஸில் புகார்!

ஹெச்.ராஜா மீது போலீஸில் புகார்!

பொதுமேடைகளில் கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசிவரும் ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் வழக்கறிஞர்கள் புகார் அளித்துள்ளனர்.

பாஜகவின் தேசிய செயலாளரான ஹெச்.ராஜா பொதுமேடைகளில் தனி நபர்களைத் தாக்கியும், திட்டியும் பேசுவதையுமே வழக்கமாக வைத்துள்ளார். சமீபத்தில் பேசிய அவர், திருமாவளவன் மட்டும்தான் ரவுடியா, வேட்டியை மடித்துக் கட்டினால் நானும் ரவுடிதான் என்று பேசினார். ஆண்டாள் சர்ச்சையின்போது கவிஞர் வைரமுத்து மீது தனிப்பட்ட முறையில் அவதூறு வார்த்தைகளால் தாக்குதல் தொடுத்தார். இதனையடுத்து வைரமுத்துவுக்கு ஆதரவாகவும், ராஜாவைக் கைது செய்ய வேண்டுமெனவும் பல்வேறு தலைவர்களும் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

இந்நிலையில் மேடைகளில் அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலும், மதக்கலவரத்தை தூண்டும் வகையிலும் பேசிவரும் ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனத் திருவண்ணாமலை காவல்நிலையத்தில் இன்று (ஜனவரி 15) புகார் அளிக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர் சீனிவாசன் தலைமையில் 20க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இந்தப் புகாரை அளித்துள்ளனர்.

இதுகுறித்து வழக்கறிஞர்கள் கூறுகையில், "ஹெச்.ராஜா இந்திய இறையாண்மை, மதநல்லிணக்கத்துக்கு எதிராகப் பல கூட்டங்களில் இழிவாகவும், தரக்குறைவாகவும் பேசி வருகிறார். தான் மதச்சார்புடையவர் என்று கூறிக் கொண்டு இறந்த தலைவர்களையும், தமிழர்களால் நேசிக்கப்படுகிற திராவிடத் தலைவர்களையும் இழிவுபடுத்தும் வகையில் பேசி வருகிறார். இவரால் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பும், பிளவும் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசி வரும் ஹெச்.ராஜா மீது கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையில் புகார் அளித்துள்ளோம்" என்று குறிப்பிட்டுள்ளனர்.

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

திங்கள் 15 ஜன 2018