மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 15 ஜன 2018

நான் இனவெறியன் அல்ல!

நான் இனவெறியன் அல்ல!

ஆப்ரிக்க நாடுகள் பற்றி இனவெறியுடன் தான் எந்த கருத்தையும் கூறவில்லை என்றும் தான் இனவெறியன் அல்ல எனவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இன்று (ஜனவரி 15) தெரிவித்துள்ளார்.

அமெரிக்க வெள்ளை மாளிகையிலுள்ள ஓவல் அலுவலகத்தில் கடந்த 11ஆம் தேதி குடியேற்ற உடன்படிக்கை தொடர்பாக அதிபர் ட்ரம்ப் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் , " ஆப்ரிக்க நாடுகளில் இருந்து வந்த மக்களை நாம் ஏன் இங்கே வைத்திருக்க வேண்டும்? அவர்களுக்கு பதிலாக நார்வே போன்ற நாடுகளில் இருந்து வருகிற குடியேறிகளை நாம் வைத்துக்கொள்ளலாமே? நமக்கு இன்னும் கூடுதலான ஹைதி நாட்டினர் எதற்காக வேண்டும்? அவர்களை வெளியேற்ற வேண்டும்" என்று ஆப்ரிக்க நாடுகளை இழிவுப்படுத்தி பேசியதாக தகவல் வெளியாகி இருந்தது. ஆப்ரிக்க நாடுகள் குறித்து அவர் ஆபாச வார்த்தைகளில் வசை பாடியதாகவும் கூறப்படுகிறது.

அதிபர் ட்ரம்ப்பின் பேச்சுக்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் அவருடைய ஆளும் குடியரசு கட்சியை சார்ந்தவர்களே அவரை கடுமையாக எதிர்த்தனர். மேலும் 55 ஆப்ரிக்க நாடுகள் அதிபர் ட்ரம்ப்பின் பேச்சுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளன. ட்ரம்பை இனவெறியாளன் என்று ஐ.நா குறிப்பிட்டது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

திங்கள் 15 ஜன 2018