மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 15 ஜன 2018

திருவள்ளுவருக்கு மணல் சிற்பம்!

திருவள்ளுவருக்கு மணல் சிற்பம்!

மல்லை தமிழ்ச் சங்கம் சார்பில் மாமல்லபுரத்தில் 133 அடியில் திருவள்ளுவர் உருவ மணல் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

திருவள்ளுவர் தினம் இன்று (ஜனவரி 15) கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, 133 அடியில் திருவள்ளுவர் உருவம்கொண்ட மணல் சிற்பம் மாமல்லபுரம் கடற்கரையில் உருவாக்கப்பட்டது. முப்பது பேர் கொண்ட கலைஞர்கள் கடந்த ஐந்து நாள்களாக இரவும் பகலுமாக சிற்பத்தை உருவாக்கியுள்ளனர். திருவள்ளுவர் தினத்தையும் மல்லை சிற்பிகளின் கலைத்திறனையும் உலகளவில் பெருமைகொள்ளச் செய்யும் முயற்சியாகவும் திருவள்ளுவருக்கு மணல் சிற்பம் எழுப்பியுள்ளனர்.

இதற்கான ஏற்பாடுகளை மல்லை தமிழ்ச் சங்கத்தின் தலைவர் மல்லை சத்யா மற்றும் சங்கத்தின் நிர்வாகிகள் செய்துள்ளனர். மணல் சிற்பத்தை மக்கள் பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால் ஏராளமான மக்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

திங்கள் 15 ஜன 2018