மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 15 ஜன 2018

தமிழக விவசாயிகளும் இந்திய குடிமக்கள்தான்!

தமிழக விவசாயிகளும் இந்திய குடிமக்கள்தான்!

காவிரி விவகாரத்தில் தமிழக விவசாயிகளும் இந்தியக் குடிமக்கள்தான் என்பதை மத்திய அரசு உணர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 13ஆம் தேதி கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு எழுதியக் கடிதத்தில், தமிழக விவசாயிகளின் நலன் கருதி டெல்டா பாசனத்திற்காக உடனடியாக 7டிஎம்சி நீரும், இரண்டு வாரத்திற்குள் 15 டிஎம்சி தண்ணீரும் திறந்துவிட வேண்டுமென வலியுறுத்தி இருந்தார். ஆனால் கர்நாடகத்துக்கே தேவைக்கு குறைவான நீர்தான் இருக்கிறது. எனவே தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிட முடியாது என்று சித்தராமையா கைவிரித்துவிட்டார்.

இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (ஜனவரி 15) வெளியிட்டுள்ள அறிக்கையில், "கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர், ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய 4 அணைகளிலும் சேர்த்து 39.77 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே இருப்பது உண்மை தான். அதே நேரத்தில் கர்நாடகத்தில் பாசனப் பருவம் முடிவடைந்து விட்ட நிலையில், அங்குள்ள அணைகளில் உள்ள தண்ணீருக்கு தேவை இருக்காது. குடிநீர் தேவைகளுக்காக 2 டி.எம்.சி மற்றும் குறைந்தபட்ச நீர் இருப்பு 8 டி.எம்.சி போக மீதமுள்ள 30 டி.எம்.சி. நீரை தமிழகத்திற்கு திறந்து விடலாம். தமிழகத்திற்கு தண்ணீர் மறுக்க கர்நாடகத்திற்கு நியாயமான காரணம் எதுவுமில்லை. அடுத்த சில மாதங்களில் கர்நாடகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்காக அண்டை மாநிலத்திலுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிப்பது நல்லதல்ல" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனது அறிக்கையில், "காவிரியில் கூடுதல் தண்ணீர் திறக்கும்படி ஆணையிட வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க ஆணையிட வேண்டும் என்று கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்து முடித்துள்ள உச்ச நீதிமன்றம், மறுஅறிவிப்பு வரும் வரை தமிழகத்திற்கு வினாடிக்கு 2000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடும்படி கடந்த 2016 ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி ஆணையிட்டிருந்தது. 2017ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி அந்த ஆணையை உச்ச நீதிமன்றம் மறு உறுதி செய்தது. ஆனால், உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி கூட தமிழகத்திற்கு காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிடவில்லை" என்றும் தெரிவித்துள்ளார்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

திங்கள் 15 ஜன 2018