மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 15 ஜன 2018

அரிதாள் எரிப்புக்கு புதியத் தொழில்நுட்பம்!

அரிதாள் எரிப்புக்கு புதியத் தொழில்நுட்பம்!

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் தினேஷ் மோகன் அரிதாள் எரிப்பு நடைமுறைக்கு மாற்று வழியைக் கண்டுபிடித்துள்ளார்.

அறுவடைக்குப் பின்னர் விவசாய நிலங்களை அடுத்த பயிர் விதைப்புக்குத் தயார்படுத்தும் வகையில் நெற்கதிர் அரிதாள்களை எரிக்கும் பழைய நடைமுறையை பஞ்சாப் மற்றும் ஹரியானா உள்ளிட்ட மத்திய மற்றும் வட மாநிலங்களில் பெரும்பாலான விவசாயிகள் இன்னமும் பின்பற்றுகின்றனர். இதனால் சுற்றுச்சூழல் மாசடைவதாக மத்திய பசுமைத் தீர்ப்பாயம் கூறிவருகிறது. இதற்கான பல்வேறு மாற்று வழிகளை விவசாயிகளுக்கு மத்திய அரசாங்கம் கூறிவருகிறது. இருப்பினும் பெரும்பாலான விவசாயிகள் தொடர்ந்து அரிதாள் எரிப்பு நடைமுறையையே பின்பற்றி வருகின்றனர்.

இந்நிலையில் பேராசிரியர் தினேஷ் இதற்கான மாற்று வழியைக் கண்டுள்ளார். பயோமாஸ் அல்லது பயோச்சர் திட்டத்தை விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். இத்திட்டத்தைப் பயன்படுத்தி சுற்றுச்சூழல் மாசடையாமல் விவசாயிகள் அரிதாள்களை நீக்கலாம். மத்திய அரசு அரிதாள் நீக்கத்திற்கு இயந்திரங்களைப் பயன்படுத்த ஊக்குவித்து வருகிறது. அரிதாள் நீக்க இயந்திரங்களுக்கு மானியமும் அளித்து வருகிறது. ஆனால் இயந்திரங்களைப் பயன்படுத்துவதை விட அரிதாள்களை தீயிட்டு கொளுத்துவது எளிதாக இருப்பதாகக் கூறி விவசாயிகள் அவற்றை எரித்து வந்தனர். இந்த சூழலில் அதற்கான மாற்றுத் தீர்வை தினேஷ் மோகன் கண்டுபிடித்துள்ளார்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

திங்கள் 15 ஜன 2018