மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 15 ஜன 2018

பாலமேடு ஜல்லிக்கட்டு உற்சாகத்துடன் தொடக்கம்!

பாலமேடு ஜல்லிக்கட்டு உற்சாகத்துடன் தொடக்கம்!

புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று காலை (ஜனவரி 15) உற்சாகத்துடன் தொடங்கியது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. பொங்கலின் முதல்நாளான நேற்று(ஜனவரி 14) மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது. 954 காளைகளுடன் 623 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

பொங்கலின் இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கலான இன்று மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகத்துடன் தொடங்கியது. இதில், 1,002 காளைகளும், 1,188 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். இன்று காலை 8 மணியளவில் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆ.பி.உதயகுமார், எம்எல்ஏ மாணிக்கம், மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், விலங்குகள் நல வாரிய முன்னாள் உறுப்பினர் எஸ்.கே.மிட்டல் ஆகியோர் தொடங்கிவைத்தனர். பாலமேடு மஞ்சமலையான் கோயில் ஆற்றுத் திடலில் அமைக்கப்பட்ட வாடிவாசல் முன்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமையில் மாடுகளை துன்புறுத்தமாட்டோம் என வீரர்கள் உறுதி மொழி எடுத்தனர்.

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்வதற்காக, 12 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெற்றிபெறும் காளைகளுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும், இருசக்கர வாகனம், கட்டில், தங்கக்காசு, பீரோ உள்ளிட்ட பரிசுப்பொருள்கள் வழங்கப்படுகிறது. 20 ஆம்புலன்ஸ்களும் 2 இருசக்கர ஆம்புலன்ஸ்களும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணிகளுக்காக 1000க்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபட்டுள்ளனர். ஜல்லிக்கட்டில் அதிகளவிலான காளைகள் பங்கேற்க உள்ளதால், போட்டியின் நேரத்தை நீட்டிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 11 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

திங்கள் 15 ஜன 2018