மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 15 ஜன 2018

நீதிபதிகளுக்கு எதிராக முறையீடு!

நீதிபதிகளுக்கு எதிராக முறையீடு!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் செய்தியாளர் சந்திப்பு தொடர்பாக வழக்கறிஞர் ஆர்.பி.லுத்ரா என்பவர் தலைமை நீதிபதி அமர்வின் முன்பு முறையிட்டுள்ளார்.

கடந்த 12ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், மதன் பி லோகூர் மற்றும் ரஞ்சன் கோகாய் ஆகியோர் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக மறைமுகமாகப் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். நீதித்துறை வரலாற்றிலேயே முதல்முறையாக நடைபெற்ற இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பையும் பலத்தை விவாதத்தையும் கிளப்பியது.

இந்த விவகாரத்தை முடிவுக்குக் கொண்டு வர இந்திய பார் கவுன்சில் சார்பில் 7பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு தலைமை நீதிபதியிடமும் மற்ற நீதிபதிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

வழக்கமாக காலை 10.30மணிக்குத் தொடங்கும் உச்ச நீதிமன்றத்தில் அலுவல் நேரம், இன்று (ஜனவரி 15) சிறிது நேரம் கழித்து 10.40 மணியளவில் ஆரம்பித்தது. தலைமை நீதிபதி மீது புகார் கூறிய 4 நீதிபதிகளும் நீதிமன்றத்துக்கு வருகை தந்து தங்களுடைய அன்றாட பணிகளை கவனிக்க ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் நீதிபதிகள் பத்திரிக்கையாளர்களை சந்தித்தது குறித்து உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஆர்.பி.லூத்ரா என்பவர் தலைமை நீதிபதி அமர்வில் முறையிட்டுள்ளார். அவர், "உச்ச நீதிமன்றத்தின் மாண்புக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளதாகவும், அதற்கு தலைமை நீதிபதி சிரித்துவிட்டு பதிலேதும் கூறாமல் அமைதியாக வேறு வழக்குகளை கவனிக்க ஆரம்பித்துவிட்டார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

திங்கள் 15 ஜன 2018