குழப்பத்தில் வித்யா பாலன்


இந்தியாவின் முன்னாள் பிரதமரான இந்திராகாந்தியின் வாழ்க்கை வரலாறு படத்தில் வித்யா பாலன் நடிப்பதாக வெளியான தகவல் குறித்து தற்போது அவர் விளக்கம் அளித்துள்ளார்.
எழுத்தாளர் சகாரியா கோஷ் இந்திரா காந்தியை மையமாக வைத்து ‘இந்திரா இந்தியாவின் மோஸ்ட் பவர்புல் பிரைம் மினிஸ்டர்’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இந்தப் புத்தகத்தின் உரிமையை வித்யாபாலன் வாங்கியுள்ளார். மேலும் இதையடுத்து, அவர் ‘இந்திராகாந்தி’ படத்தில் நடிக்கிறார் என்பது குறித்த தகவலை ஏற்கனவே நமது மின்னம்பலத்தில் பதிவு செய்திருந்தோம்.