மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 15 ஜன 2018

சில்லறை நாணயத் தயாரிப்பு தொடக்கம்!

சில்லறை நாணயத் தயாரிப்பு தொடக்கம்!

சில்லறை நாணய உற்பத்தியை நிறுத்தி வைத்திருந்த மத்திய அரசு முடிவை மாற்றிக்கொண்டு மீண்டும் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளது.

அரசு நாணய சேமிப்புக் கிடங்குகளில் நாணயங்களை சேமித்து வைக்க இடம் இல்லாததால் தற்காலிகமாக நாணய உற்பத்தி நிறுத்தப்படுகிறது என்று கடந்த வாரம் அறிவிப்பு வெளியானது. இதையடுத்து ஜனவரி 8ஆம் தேதி முதல் நாணய உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தயாரிப்புக் கூடங்களின் பணியை முடங்கச் செய்யாமல், சேமிப்புக் கிடங்குகளில் உள்ள நாணயங்களை உடனடியாக ரிசர்வ் வங்கி பெற்றுக்கொள்ள அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டுமென்று நாணய தயாரிப்புக் கூடங்களின் யூனியன்கள் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்திருந்தன.

இதையடுத்து மத்திய அரசு தற்போது குறைவான அளவில் உற்பத்தியை மீண்டும் தொடங்கியுள்ளன. ஜனவரி 12ஆம் தேதி முதல் மீண்டும் நாணய உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. கொல்கத்தா நாணய தயாரிப்பு ஆலையில் நாணய உற்பத்தியை மீண்டும் தொடங்கியுள்ளதாக கொல்கத்தா நாணயத் தயாரிப்பு ஆலை தொழிலாளர் சங்கத்தின் துணைத் தலைவர் பிஜன் டேய் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

திங்கள் 15 ஜன 2018