உரங்களுக்கும் ஆதார் : விவசாயிகளின் ஆதரவு!


உரங்களை மானிய விலையில் பெற ஆதார் எண்ணை இணைக்கும் திட்டத்துக்கு பெரும்பான்மையான விவசாயிகள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து நிதி ஆயோக் கருத்து கணிப்பு ஒன்று நடத்தியது. மகாராஷ்டிரா, ஹரியானா, கர்நாடகா, ஆந்திரா, மத்திய பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 14 மாவட்டங்களில் 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. அதில் மத்திய அரசின் மானிய உர விற்பனையை, ஆதாருடன் இணைக்கும் திட்டத்துக்கு 59 சதவிகித விவசாயிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே சமயம், பயனாளிகளுக்கு நேரடியாக பணம் அனுப்பும் திட்டத்தின் கீழ் கைவிரல் ரேகைகள் பொருந்தவில்லை என கூறப்படுவதால் ஆதார் இணைப்பை எதிர்ப்பதாக 79 சதவிகித விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.