மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 15 ஜன 2018

ராணுவ தினம்: பிரதமர் வாழ்த்து

ராணுவ தினம்: பிரதமர் வாழ்த்து

இந்திய ராணுவ தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முதல் தரைப்படைத் தளபதியாக ஃபீல்டு மார்ஷல் கே.எம்.கரியப்பா பொறுப்பேற்ற ஜனவரி 15ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் ராணுவ தினமாக அனுசரிக்கப்படுகிறது.

ராணுவ தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், “இந்திய ராணுவ தினத்தில், ராணுவ வீரர்கள், முன்னாள் வீரர்கள், அவர்களின் குடும்பத்தினருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டை காப்பதுடன், இயற்கை பேரிடர் மற்றும் விபத்துக்களின் போதும் மனிதநேயத்துடன் போராடுவதால் நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் நமது ராணுவத்தின் மீது நம்பிக்கையும், பெருமையும் கொண்டுள்ளனர்.

நமது ராணுவம் எப்போதும் நமது நாட்டை முதன்மைப்படுத்துகிறது. நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த ஒவ்வொரு ராணுவ வீரர்களையும் வணங்குகிறேன். இத்தகைய மதிப்பு மிக்க ஹீரோக்களை இந்தியா ஒருபோதும் மறவாது” என்று தெரிவித்துள்ளார். பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உட்பட பலரும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

ராணுவ தினத்தை முன்னிட்டு, சென்னை போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. தென்பிராந்திய ராணுவ தலைமை அதிகாரி ஆர்.கே.ஆனந்த் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

திங்கள் 15 ஜன 2018