மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 15 ஜன 2018

எண்ணெய் சுத்திகரிப்புக்குக் கூடுதல் முதலீடு!

எண்ணெய் சுத்திகரிப்புக்குக் கூடுதல் முதலீடு!

இந்தியாவின் சுத்திகரிப்புத் திறனை அடுத்த 10 ஆண்டுகளில் இரண்டு மடங்காக அதிகரிக்க இந்தியாவுக்கு 300 மில்லியன் டாலர் வரை தேவைப்படும் என்று பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

இதுகுறித்து சனிக்கிழமை (ஜனவரி 13) புவனேஷ்வரில் நடந்த 22ஆவது சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல் கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் பேசுகையில், "தற்போது இந்தியாவில் 247 மில்லியன் டன் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. இந்தியாவின் எண்ணெய் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2040ஆம் ஆண்டில் இந்தியாவின் எண்ணெய் தேவை 600 மில்லியன் டன்னாக இருக்கும்.

குழாய் வழியாக பெட்ரோலியப் பொருட்களை எடுத்துச் செல்லும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 69 மில்லியன் டன் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு செய்யும் வகையில் புதிதாக இரண்டு ஆலைகள் விரைவில் அமைக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக 20 மில்லியன் டன் கூடுதலாக சுத்திகரிப்பு செய்தால் 2040ஆம் ஆண்டுக்குள் 600 மில்லியன் டன் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு சாத்தியமாகும். அதேபோல ஹைட்ரோ கார்பன் துறையில் 300 பில்லியன் டாலர் முதலீடு செய்ய வேண்டிய தேவை உள்ளது " என்றார்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

திங்கள் 15 ஜன 2018