மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 15 ஜன 2018

அன்னதான திட்டம் : முதல்வர் தொடங்கி வைத்தார்!

அன்னதான திட்டம் : முதல்வர் தொடங்கி வைத்தார்!

புதுச்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோயிலில் அன்னதான திட்டத்தை முதல்வர் நாராயணசாமி நேற்று (ஜனவரி 14) தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி, காரைக்கால் கோயில்களில் அன்னதானத் திட்டம் கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அது தொடர்பான ஆலோசனை கூட்டம் முதல்வர் நாராயணசாமி தலைமையில் புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் 2017 டிசம்பர் 12ஆம் தேதி நடைபெற்றது. அப்போது, தை 1ஆம் தேதி முதல் மணக்குள விநாயகர் கோயில், வேத புரீஸ்வரர் கோயில், குருசித்தானந்தா கோயில், வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோயில், காரைக்காலில் உள்ள திருநள்ளார் சனீஸ்வரன் கோயில், அம்பகரத்தூர் பத்ரகாளி அம்மன் கோயில்களில் வெள்ளி , சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அன்னதான திட்டம் நடை முறைப்படுத்தப்படும் என முதல்வர் அறிவித்தார்.

அதன்படி, மணக்குள விநாயகர் கோயிலில் நேற்று அன்னதான திட்ட தொடக்க விழா நடந்தது. புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அன்னதான திட்டத்தை தொடங்கி வைத்து பக்தர்களுக்கும் உணவு பரிமாறினார்.விழாவில் துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, லட்சுமி நாராயணன் எம்எல்ஏ இந்து அறநிலையத் துறை செயலாளர் சுந்தர வடிவேல், ஆணையர் தில்லைவேல், கோவில் தனி அதிகாரி, அறங்காவலர் குழுவினர் பங்கேற்றனர். 250 பக்தர்களுக்குத் தலைவாழை இலை போட்டு உணவு பரிமாறப்பட்டது.

கோயிலில் உச்சிகால பூஜைகள் முடிந்து நடை சாத்தப்பட்டாலும், மதியம் 1 மணிக்கு அன்னதானம் வழங்கப்படும். அதற்கான டோக்கன்கள் முன்னரே வழங்கப்படும். டோக்கன் பெற்றவர்களுக்கு மட்டுமே அன்னதானம் வழங்கப்படும். பக்தர்கள், பிறந்த நாள் அல்லது திருமண நாள் போன்ற நாட்களில் அன்னதானம் வழங்க விரும்பினால், 100 நபர்களுக்கு அன்னதானம் வழங்க 4,000 ரூபாய் செலுத்த வேண்டும். அன்னதானத்தில், மதிய உணவாக வாழை இலையில் சாதம், சாம்பார், ரசம், பொரியல், மோர், ஊறுகாய் வழங்கப்படும். கூடுதலாக இனிப்பு, அப்பளம், வடை, பாயசம் சேர்த்து வழங்க 5,000 ரூபாய் நன்கொடை செலுத்த வேண்டும்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

திங்கள் 15 ஜன 2018