மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 15 ஜன 2018

வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து!

வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஜேசன் ராய் அதிரடி ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இங்கிலாந்து அணி முதலில் ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரை ஆஸ்திரேலியா அணி 4-0 என கைப்பற்றியது. அதைத்தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் நேற்று (ஜனவரி 14) தொடங்கியது.

முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் இயான் மார்கன் பந்துவீச்சை தேர்வு செய்தார். ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆரோன் பிஞ்ச், டேவிட் வார்னர் களமிறங்கினர். வார்னர் 2 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் மார்க் உட் பந்தில் ஆட்டமிழந்தார். ஸ்மித் 23 ரன்களிலும், அவரைத்தொடர்ந்து களமிறங்கிய டிராவிஸ் ஹெட் 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

அதன்பின் பிஞ்ச்-உடன் மிச்செல் மார்ஷ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடி ரன்குவித்தது. டிராவிஸ் ஹெட் 50 ரன்களில் ஆட்டமிழந்தார். பிஞ்ச் 107 ரன்களில் மோயின் அலி பந்தில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய மார்கஸ் ஸ்டாயின்ஸ் 40 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டிம் பெய்ன் 27 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 304 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி பந்துவீச்சில் லியாம் பிளங்கீட் 3 விக்கெட்களும், அடில் ரஷித் 2 விக்கெட்களும், மோயின் அலி, மார்க் உட், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய், பேர்ஸ்டோவ் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். அணியின் எண்ணிக்கை 53 ஆக இருக்கும்போது, பேர்ஸ்டோவ் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ஆடிய ஹேல்ஸ் விரைவில் அவுட்டானார். இதனால் அந்த அணி 60 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

முதலில் நிதானமாக விளையாடிய ஜேசன் ராய் பின்னர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஜோரூட் அவருக்கு பக்கபலமாக நின்றார். இதனால் அணியின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது. ஜேசன் ராய் 151 பந்துகளில் 5 சிக்சர்கள், 16 பவுண்டரிகளுடன் 180 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜேசன் ராய் - ஜோ ரூட் ஜோடி 223 ரன்கள் எடுத்தது.

அதன்பின் ஜோ ரூட் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். இறுதியில், இங்கிலாந்து அணி 48.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜோ ரூட் 91 ரன்களுடனும், மொயின் அலி 5 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸ்திரேலிய அணி சார்பில் ஸ்டார்க், கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுகளும், ஸ்டோனிஸ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதையடுத்து, 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

திங்கள் 15 ஜன 2018