உற்பத்தி குறியீடு: 30ஆவது இடத்தில் இந்தியா!


உலக உற்பத்தி குறியீட்டில் இந்தியா 30ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
இதுகுறித்து உலகப் பொருளாதார மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலக உற்பத்திக் குறியீட்டில் இந்தியா 30ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. அண்டை நாடான சீனா 5 இடத்துக்குள் உள்ளது. ஜப்பான் இந்தப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. ஜப்பானைத் தொடர்ந்து தென் கொரியா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, சீனா, செக் குடியரசு, அமெரிக்கா, ஸ்வீடன், ஆஸ்திரியா மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகள் முறையே 10 இடங்களைப் பிடித்துள்ளன. பிரிக்ஸ் நாடுகளில் ரஷ்யா 35ஆவது இடத்தையும், பிரேசில் 41ஆவது இடத்தையும், தென்னாப்பிரிக்கா 45ஆவது இடத்தையும் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் முதல் 25 இடங்களில் உள்ள நாடுகள் உற்பத்தித் துறை அமைப்பில் சிறந்த நிலையில் விளங்குகின்றன.