மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 15 ஜன 2018

டெல்லியை வாட்டி வதைக்கும் பனி!

டெல்லியை வாட்டி வதைக்கும் பனி!

பனிமூட்டம் காரணமாக டெல்லி மக்கள் அனுபவிக்கும் அவதி நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. அருகில் இருப்பவரைக் கூட பார்க்க முடியாத அளவுக்குச் சூழ்ந்திருக்கும் பனிமூட்டத்தால் 39 ரயில்கள் தாமதமாகவும்,4 ரயில்கள் நேரம் மாற்றப்பட்டும், 13 ரயில்கள் ரத்து செய்யப்பட்டும் உள்ளன.

புத்தாண்டு பிறந்ததிலிருந்து டெல்லி பனிமூட்ட புகையால் அவதிப்பட்டு வருகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. வான்வழி போக்குவரத்து, தரைவழிப் போக்குவரத்து என அனைத்துச் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. காலை பத்து மணியைத் தாண்டியும் பனிமூட்டம் விலகாமல் அப்படியே இருப்பதால் மக்கள் செய்வதறியாது தவிக்கின்றனர். இந்நிலையில் டெல்லியில் குறைந்த காண்புதிறன், பனிமூட்டம் ஆகியவற்றின் காரணமாக ரயில்களின் வருகை மற்றும் புறப்பாட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

அதனால், 39 ரயில்கள் தாமதமாக வரும் என்றும் 13 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும், 4 ரயில்களின் நேரம் மாற்றிமைக்கப்பட்டுள்ளது என்றும் வடக்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

திங்கள் 15 ஜன 2018