மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 15 ஜன 2018

ரஜினியும் பாஜகவும் இணைய வேண்டும்!

ரஜினியும் பாஜகவும் இணைய வேண்டும்!

‘பாஜகவும் ரஜினியும் இணைந்தால் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற முடியும்’ என்று ஆடிட்டர் குருமூர்த்தி பேசியுள்ளார்.

‘ஆளும் அதிமுகவை மத்திய பாஜக அரசு பின்னிருந்து இயக்குகிறது. அதன் பின்னணியில் துக்ளக் ஆசிரியரும் ஆடிட்டருமான குருமூர்த்தி இருக்கிறார்’ என்று அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்டு வந்தது. கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவிலிருந்து தினகரன் ஆதரவாளர்கள் நீக்கப்பட்டனர். குருமூர்த்தி இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அதிமுகவினரை ஆண்மையற்றவர்கள்’ என்று பொருள்படும்விதமாக விமர்சித்தார்.

இதற்குப் பதிலடியாக அமைச்சர் ஜெயக்குமார், பத்து மாதங்களாக ஆண்மையுடன் ஆட்சி நடத்தி வருவதாகக் கருத்து தெரிவித்தார்.

இந்த நிலையில் நேற்று துக்ளக் பத்திரிகையின் 48ஆவது ஆண்டு விழாவில் பேசிய துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, “கழகங்களுடன் தொடர்பு கொண்டால் தமிழகத்தில் பாஜக வளர முடியாது” என்று கூறியுள்ளார்.

மேலும் பேசுகையில், “புதிய முறையில் மக்களிடம் சென்று சேராவிட்டால் திமுகவின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். இந்து நம்பிக்கையை அவமானம் செய்வது திராவிட டி.என்.ஏவில் உள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் ஆன்மிகத்தை மறக்கடித்துள்ளனர். இதனால் ஆன்மிகம் என்றால் என்ன என்பதை விளக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது” என்று விமர்சித்து பேசினார். மேலும், “ஆண்டாள் குறித்து வைரமுத்து பேசுவது தவறு” என்றும் தெரிவித்தார். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிரச்னை பற்றி பேசும்போது, “ஜனவரி 12இல் உச்ச நீதிமன்றத்தில் நடந்த சம்பவம், குழாயடி சண்டை போல் இருந்தது” என்றும் விமர்சித்துள்ளார்.

மேலும் அவர், “ரஜினி ஆன்மிக அரசியல் என்று கூறியது, கழகக் கட்சிகளைப் போல் தன்னுடைய ஆட்சி இருக்காது என்பதை காட்டுகிறது. தமிழக அரசியலில் ரஜினிக்குச் சிறந்த வாய்ப்பு உள்ளது. பாஜகவும் ரஜினியும் இணைந்தால் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற முடியும். கமலின் அரசியல் வருகை கழகங்களின் தொடர்ச்சியாகவே இருக்கும்” என்றும் கூறினார்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

திங்கள் 15 ஜன 2018