மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 15 ஜன 2018

கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம்!

கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம்!

பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கவுள்ள புதிய படத்தின் தலைப்பு வெளியாகாமல் இருந்த நிலையில் நடிகர் சூர்யா அதன் போஸ்டரை வெளியிட்டு தலைப்பை அறிவித்துள்ளார்.

பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக சாயிஷா, ப்ரியா பவானி சங்கர், அர்த்தனா நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு நவம்பர் 9ஆம் தேதி பூஜையுடன் சென்னையில் தொடங்கியது. பெரும்பாலான காட்சிகளைத் தென்காசியில் படமாக்கப் படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது. கிராமத்துக் கதைக்களத்தில் உருவாகும் இந்தப் படத்தின் தலைப்பு மட்டும் உறுதிசெய்யப்படாமல் இருந்தது. இந்த நிலையில் சூர்யா நேற்று (ஜனவரி 14) தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

‘கடைக்குட்டி சிங்கம்’ என இதற்குப் பெயரிடப்பட்டுள்ளது. ‘பயிர் செய்ய விரும்பு’ என்ற டேக் லைனும் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. தெலுங்கில் ‘சின்னபாபு’ என்ற பெயரில் வெளியாகிறது.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

திங்கள் 15 ஜன 2018