மின்னம்பலம் வாசகருக்கு ஸ்மார்ட்போன் பரிசு!

தமிழின் முதல் மொபைல் பத்திரிகையான நமது மின்னம்பலம்.காம் வாசகர்களை ஊக்குவிக்கும்விதமாக சென்னைப் புத்தகக் காட்சியில் தினம் ஒரு ஸ்மார்ட்போன் பரிசு வழங்கி வருகிறது. வாசகர்களிடையே இத்திட்டத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
நேற்று (ஜனவரி 14) விடுமுறை தினம் என்பதால் காலை முதலே சென்னைப் புத்தகக் காட்சி வளாகத்தில் கூட்டம் களை கட்டியிருந்தது. அரங்கு எண் 379இல் வைக்கப்பட்டுள்ள நமது மின்னம்பலம் பதிப்பகப் புத்தகங்களை நோக்கி வழக்கம்போல் அனைத்து தரப்பு மக்களும் வருகை தந்தனர்.
அரசியல், பொருளாதாரம், கலை, சமூகம் என பல்வேறு தளங்களில் நுட்பமான பார்வையுடன் வெளிவந்துள்ள கட்டுரைகள் அடங்கிய புத்தகங்கள் அவர்களது விருப்ப தேர்வாக இருப்பதில் ஆச்சர்யப்படுவதற்கு ஏதுமில்லை.
வாசகர்களை ஊக்குவிக்கும் விதத்தில் மின்னபலம்.காம் முன்னெடுத்துள்ள ஸ்மார்ட்போன் பரிசு திட்டத்தில் பங்கேற்க வாசகர்கள் நமது அரங்கத்துக்கு வருகை தருவது போதுமானது. நாளுக்கு நாள் இதில் கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் நடைபெறும் குலுக்கலில் ஒரு வாசகருக்கு ஸ்மார்ட்போன் பரிசு வழங்கப்படும். அந்தவகையில் கேளம்பாக்கத்தில் உள்ள ஒரு மென்பொருள் அலுவலகத்தில் பணியாற்றும் நாகராஜன் MI 5A மாடல் ஸ்மார்ட்போனைத் தட்டிச் சென்றார்.