மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 15 ஜன 2018

பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு!

பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு!

மதுரை பாலமேட்டில் இன்றும், அலங்காநல்லூரில் நாளையும் (ஜனவரி 16) ஜல்லிக்கட்டு நடக்கிறது. தமிழர்களின் பண்டிகையில் முக்கியமான ஒன்று பொங்கல் விழா. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். இவற்றுள் மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகளவில் பிரபலமானது.

அவனியாபுரத்தில் நேற்று (ஜனவரி 14) ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் 954 காளைகளுடன் 623 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். காலை 8 மணிக்கு வாடிவாசல் திறக்கப்பட்டது. 954க்கும் அதிகமான வீரர்கள் மாடு பிடிக்க பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் ஆறு சுற்றுகளாக 470 வீரர்கள் மாடு பிடிக்க அனுமதிக்கப்பட்டனர். மேலும் 4 மணிக்குப் போட்டி நிறைவு செய்யப்பட்டது. போட்டியில் சிறப்பாக செயல்பட்ட மாடுபிடி வீரர்கள் ஐந்து பேருக்கும், ஐந்து காளை உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

திங்கள் 15 ஜன 2018