மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 15 ஜன 2018

பியூட்டி ப்ரியா

பியூட்டி ப்ரியா

கூந்தல் அழகைப் பராமரிப்பதில் சிகைக்காய்க்கு முக்கிய பங்குண்டு. இதில் உள்ள இயற்கை பொருள்கள் கூந்தலின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது.

நெல்லிக்காய் இயற்கை மருந்து பொருளாகப் பயன்படுகிறது. இதில் உள்ள வைட்டமின் சி கூந்தலின் வேர்களை வலுவாக்குகிறது. நெல்லிக்காய், சிகைக்காய், வேப்பிலை கலந்த பொடி கூந்தல் வளர்ச்சிக்கும் அழகுக்கும் சிறந்த பொருளாக உள்ளது.

இயற்கையாகக் கிடைக்கும் முல்தானி மெட்டி, சிறந்த ஸ்கிரப்பராகப் பயன்படுகிறது. சருமத்தைப் பாதுகாக்க தக்காளி சாறுடன் முல்தானி மெட்டியைக் கலந்து பேஸ்பேக் ஆக போடலாம்.

இந்திய உணவுப்பொருளில் தயிர் தினசரி பயன்படுகிறது. இது இளமையைத் தக்கவைக்கும் இயற்கை அழகு சாதனப் பொருளாகும்.

கடலைமாவு இந்திய சமையலறையில் கிடைக்கும் முக்கிய பொருள். இது பாரம்பர்யமாகக் குளியல் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இன்றைக்கும் பெரும்பாலானோர் சருமப் பாதுகாப்புக்காகக் கடலை மாவைப் பயன்படுத்துகின்றனர்.

* முகத்தில் பருக்கள் இருந்தால் வெள்ளைப் பூண்டையும், துத்தி இலையையும் சம அளவு எடுத்து அதை நறுக்கி, பின் நல்லெண்ணெயில் போட்டு நன்கு காய்ச்சி தினசரி பருக்கள் உள்ள இடத்தில் தடவிவந்தால், விரைவில் பருக்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

* வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளைக் காயவைத்து, தூளாக்கி வைத்துக்கொள்ளவும். இதில் சிறிது எடுத்து பாலில் குழைத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் ஊறவைத்து குளித்தால், வியர்குரு வராமல், தோல் கறுத்துப் போகாமல் இருக்கும்.

வறண்ட மற்றும் எண்ணெய் பசைமிக்க முகங்களுக்கு...

* ஆப்பிள் பழத்தைச் சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணெய் பசை குறையும்.

* தோல் நீக்கிய ஆப்பிள் பழத்தை நன்றாக மசித்து, அத்துடன் சிறிது தேன், ஓட்ஸ் பவுடர் ஆகியவற்றை கலந்து, அந்தக் கலவையை முகத்தில் பூசி சுமார் அரைமணி நேரம் ஊறவிட்டு, முகத்தைக் கழுவவும். உங்கள் வறண்ட சருமம் காணாமல் போய்விடும்.

* தக்காளியை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணெய் பசை குறையும்.

* மோரை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புதுப் பொலிவடையும்.

* பழுத்த வாழைப்பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடங்கள் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும்.

* இரண்டு வகையான சருமம் உள்ளது. ஒன்று உலர்ந்த சருமம். மற்றது எண்ணெய் வடியும் சருமம். எல்லா வகையான சருமத்தையும் பாதுகாக்க வேண்டும். உலர்ந்த சருமத்துக்கு கேரட்டை நன்றாக அரைத்து ஒரு டீஸ்பூன் தேன் கலந்து 20 நிமிடங்கள் உடலில் பூசி, பின் குளிர்ந்த நீரில் கழுவிவிட வேண்டும். இதேபோல் எண்ணெய் வழியும் சருமத்துக்கு மருந்து கடைகளில் இருந்து மூலிகை கலந்த பவுடரை வாங்கி பூசிக்கொள்ளலாம். இதன்மூலம் முகம் புத்தொளி பெறும்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

திங்கள் 15 ஜன 2018