மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 15 ஜன 2018

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பொங்கல்!

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பொங்கல்!

உலகம் எங்கும் தமிழ் மக்களால் கொண்டாடப்படும் பொங்கல் விழாவுக்குப் பல்வேறு நாடுகளின் தலைவர்களும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்து பிரதமர் தெரசா மே தனது ட்விட்டரில், பொங்கல் கொண்டாடும் தமிழ் மக்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

இதுமட்டுமல்லாமல், இங்கிலாந்து நாடாளுமன்ற வரலாற்றிலேயே முதன்முறையாக வரும் ஜனவரி 17ஆம் தேதி பொங்கல் விழா நாடாளுமன்ற வளாகத்திலே கொண்டாடப்பட இருக்கிறது.

தைப்பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. தமிழர் திருநாளாகத் தமிழர்களால் தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வடஅமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, மொரிஷியஸ் எனத் தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.

இங்கிலாந்தை மையமாகக்கொண்டு இயங்கிவரும் தமிழர் அமைப்பான பிரித்தானிய தமிழர் பேரவை நிர்வாகிகள் இதுகுறித்துத் தெரிவிக்கையில்,

“தமிழர்களின் கலை, பண்பாடு, வரலாறு, அறிவியல் போன்றவற்றை நாம் வாழும் நாட்டு மக்களுக்குக் கொண்டுசென்று தமிழ் இனம் ஒரு தொன்மையான பாரம்பர்யமுள்ள இனமென்பதை வெளிக்கொண்டு வரும் பல முயற்சிகள் புலம்பெயர் நாடுகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் நீண்ட காலத் தயாரிப்புகளின் அடிப்படையில் இந்த வருடம் தை பொங்கல் தினத்தை பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடத்திட சிறப்பான ஒழுங்கமைப்புகள் எம்மால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

திங்கள் 15 ஜன 2018