மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 15 ஜன 2018

அமேசானில் 6,500 தற்காலிகப் பணியாளர்கள்!

அமேசானில் 6,500 தற்காலிகப் பணியாளர்கள்!

அமேசான் நிறுவனம் ஜனவரி 20 - 24 வரையிலான சிறப்பு விற்பனை நாளுக்காக 6,500க்கும் அதிகமான தற்காலிகப் பணியாளர்களை உருவாக்கியுள்ளது.

உலகின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் இந்தியாவிலும் இ-காமர்ஸ் துறையில் முன்னணி நிறுவனமாக விளங்குகிறது. இந்நிறுவனம் ஜனவரி 20 - 24 வரை சிறப்பு மெகா விற்பனையை அறிவித்துள்ளது. இந்தக் குறிப்பிட்ட நாள்களில் அதிகமாக விற்பனையாகும் என்பதால் வாடிக்கையாளர்களை எதிர்கொள்ளப் புதிதாக 6,500க்கும் அதிகமான பணியாளர்களைத் தற்காலிமாகப் பணியில் சேர்க்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து அமேசான் இந்தியா நிறுவனத்தின் துணைத் தலைவர் அகில் சக்சேனா பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில், “சீசன் விற்பனைக்காக அமேசான் நிறுவனம் கூடுதலாக 5,500 தற்காலிகப் பணியாளர்களை இணைத்துள்ளது. மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களைப் பூர்த்தி செய்தல், வரிசை மையங்கள், விநியோக மையங்களை விரிவுபடுத்துதல் ஆகிய காரணங்களுக்கான இந்தப் பணியாளர்கள் பயன்படுத்தப்படுவார்கள். அதேபோல வாடிக்கையாளர் சேவை மையங்களுக்கு 1,000 பேர் புதிதாக இணைக்கப்படுவார்கள். இதன்மூலம் மெகா விற்பனை சமயத்தில் வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த சேவையை வழங்க முடியும்” என்றார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

திங்கள் 15 ஜன 2018