மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 15 ஜன 2018

சிறப்புச் செய்தி: மாற்றத்துக்கு வித்திட்ட சிறுவர்கள்!

சிறப்புச் செய்தி: மாற்றத்துக்கு வித்திட்ட சிறுவர்கள்!

வித்யா ராஜா

‘குடிநீரைச் சுத்தமாக வைத்திருப்பது எவ்வளவு முக்கியம் என்று தெரியவில்லை’ என்று பயன்படுத்துவதை எப்போதாவது நிறுத்திவிட்டீர்களா? உலகம் முழுவதும் பில்லியன்கணக்கான மக்கள் தண்ணீருக்காக நாள்தோறும் போராடிக் கொண்டிருக்கின்றனர். இதில் மிகுந்த ஏமாற்றம் என்னவென்றால் சுத்தமான குடிநீருக்காக எங்கும் மக்களில் இந்தியர்களும் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.

இந்தியாவின் கிராமப்புறங்களில் 63.4 மில்லியன் பேருக்குச் சுத்தமான குடிநீர் கிடைக்கவில்லை. இது மற்ற உலக நாடுகளை விட மிக அதிகமாகும். வைல்டு வாட்டரின் உலக நீர் 2017 அறிக்கையில் தண்ணீர் பராமரிப்பு, சுகாதாரத்தை மேம்படுத்துவது குறித்து கூறியுள்ளது.

இதற்கான முயற்சிகளை சில மாணவர்கள் இணைந்து மேற்கொண்டுள்ளனர். இந்த மாணவர்கள் வடக்கு பெங்களூருவில் உள்ள தேவனஹல்லி தாலுகாவில் உள்ள ஹேக்கனஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர்கள். சுக்ருத் கிருஷ்ணா குமார் என்ற 12 வயது மாணவரும் சுப்ரித் கிருஷ்ணா குமார் என்ற 9 வயது மாணவரும் பெங்களூரு சர்வதேச பள்ளியில் (டி.ஐ.எஸ்.பி) பயில்கின்றனர். தருண் குமார் என்ற 12 வயது மாணவர் கனடியன் சர்வதேச பள்ளியில் பயில்கிறார். ஹேக்கனஹள்ளியில் சுமார் 150 குடும்பங்கள் வசிக்கின்றன. சுமார் 500 பேர் வாழ்கின்றனர். ஹேக்கனஹள்ளி மக்கள் நல்ல சுத்தமான குடிநீரை அணுகியிருந்தனர்.

டிசம்பர் 28ஆம் தேதி ஹேக்கனஹள்ளியில் புதிய ஆர்.ஓ. அமைப்பு (தண்ணீர் சுத்திகரிப்பு) ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான நிலம் உள்ளூர் பஞ்சாயத்திடமிருந்து பெறப்பட்டுள்ளது. இதன் பராமரிப்பு பணியையும் பஞ்சாயத்து நிர்வாகமே மேற்கொள்ளவிருக்கிறது. “5 ரூபாய் காசு செலுத்தினால் ஒரு கேன் சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொள்ளலாம்” என்று பெங்களூரு மிரருக்கு சுக்ருத் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். இந்தப் பணம் சேகரிக்கப்பட்டு பஞ்சாயத்து நிர்வாகத்துக்கே அளிக்கப்படுகிறது.

“நான் என்னுடைய குடும்பத்துடன் கிராமத்துக்குச் சென்றிருந்தேன். அங்கு குடிநீர் சுத்தமாகவே இல்லை. சுகாதாரமற்ற குடிநீரால் உடல்நலப் பாதிப்புகள் நிறைய வருகின்றன. இதனால் அடிக்கடி குழந்தைகள் பள்ளிக்கு விடுமுறை எடுக்க வேண்டியுள்ளது என்று அங்கு குடியிருந்தவர்கள் சொன்னார்கள்” என்று சுக்ருத் தனது பேட்டியில் கூறியுள்ளார்.

இந்த மூன்று மாணவர்களும் மற்ற மாணவர்களுக்கு முன்னுதாரணம் என்பதை நிரூபித்துள்ளனர். அவர்கள் அந்தத் திட்டத்தைப் பற்றி நன்கு அறியத் தொடங்கினர். அதன்பிறகு அவர்களுடைய திட்டம் பற்றி எழுதினார்கள்.

இந்தத் திட்டத் தயாரிப்பில் சில வெற்றிகள் மற்றும் சில தோல்விகளைக் கண்ட பிறகு, ஓர் அறக்கட்டளை நிறுவுதல் சிறந்த நம்பிக்கையாக இருக்குமென்று கருதினார்கள். இவர்கள் சிறார்களாக இருந்ததால் இவர்களுடைய பெற்றோர் இவர்களுக்கு உதவினார்கள். அறக்கட்டளை ஒன்றை நிறுவினார்கள். ஆனால், மற்றபடி மற்ற எல்லா வேலைகளையும் மூன்று சிறுவர்களே மேற்கொண்டனர். பள்ளி முடிந்தபிறகு, அவர்களுடைய பள்ளிக் கடமைகளை முடித்த பிறகு இப்பணிகளை மேற்கொண்டனர்.

தங்களுடைய அறக்கட்டளைக்கு நிதி திரட்டும் பணிகளையும் இவர்கள் மேற்கொண்டனர். இதற்காக பெங்களூருவில் உள்ள பல்வேறு நன்கொடையாளர்களை இவர்கள் சென்று சந்தித்தனர். நண்பர்களிடமும் அவர்களின் மூலம் வெளியிலும் நிதி திரட்டினர். இறுதியாக ஆன்லைன் மூலமும் நிதி பெற்றனர். இந்த மூவரும் சீரிய முயற்சி எடுத்து 2018ஆம் ஆண்டில் ஹேக்கனஹள்ளி கிராமத்துக்கு ஆர்.ஓ அமைத்து சுத்தமான குடிநீரைச் சாத்தியப்படுத்தியுள்ளனர்.

ரூ.8 லட்சம் ரூபாய் நிதி திரட்டி பெரிய அளவிலான குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை இக்கிராம மக்களுக்கு இந்த மூன்று சிறுவர்களும் அமைத்துக் கொடுத்துள்ளனர். இதன்மூலம் இங்கு வசிக்கும் 500 பேரும் சுத்தமான குடிநீரைத் தற்போது பெற்று வருகின்றனர். இந்தச் சுத்திகரிப்பு நிலையம் ஒரு நாளுக்கு 2,000 லிட்டர் தண்ணீர் சுத்திகரிக்கும் திறன்கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. விடாமுயற்சியுடன் ஓராண்டு காலம் செயல்பட்டு ஹேக்கனஹள்ளி கிராமத்துக்குச் சுத்தமான, சுகாதாரமான குடிநீரை இந்த மூன்று மாணவர்களும் பெற்றுத் தந்துள்ளனர்.

சிறு வயதில் இம்மூன்று மாணவர்களின் இச்சமூக அக்கறை அப்பகுதியைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் பேசு பொருளாகியுள்ளது. மற்ற மாணவர்களுக்கும் முன்னுதாரணமாக இம்மாணவர்கள் உருவெடுத்துள்ளனர்.

நன்றி: பெங்களூர் மிரர்

தமிழில்: பிரகாசு

மின்னஞ்சல் முகவரி: [email protected]

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

திங்கள் 15 ஜன 2018