மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 15 ஜன 2018

கிச்சன் கீர்த்தனா: பால் பொங்கலும் சர்க்கரைப் பொங்கலும்!

கிச்சன் கீர்த்தனா: பால் பொங்கலும் சர்க்கரைப் பொங்கலும்!

அனைவருக்கும் உழவர் தின வாழ்த்துகள். மிக பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் பெண்மணிகளே... இந்தப் பரபரப்பான உலகில் அவசர அவசரமாகப் பொங்கல் செய்தாலும் அதை ருசியாகச் செய்து, அனைவரையும் மகிழ்வித்துக் கொண்டாடிடுவோம் வாருங்கள்.

பால் பொங்கலும் சர்க்கரைப் பொங்கலும்தான் இன்றைய மெனு.

பால் பொங்கல்

தேவையானவை:

பச்சரிசி - ஒரு கப்

வெல்லம் - சிறு துண்டு

பால் - கால் கப்

செய்முறை:

முதலில் ஒரு கப் அரிசி வேகுமளவு பாலும் தண்ணீருமாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அடுப்பில் ஏற்றவும்.

அரிசியைக் கழுவி வைத்துக்கொள்ளவும். பால் சேர்ப்பதால் தண்ணீர் பொங்கி வெளிவரும்.

பின்பு அந்த நேரத்தில் அரிசியைப் போட்டுக் கிளறிவிட்டு அது வேகும்வரை இடையிடையே கிளறிவிட்டு வெந்ததும் இறக்கவும்.

வெறும் பால் பொங்கலுடன் வெல்லம் சேர்த்து சாப்பிடும்போது சுவையாக இருக்கும்.

சர்க்கரைப் பொங்கல்

தேவையானவை

பச்சரிசி – 1 கப்

வெல்லம் – 2 கப்

தேங்காய்த் துருவல் – 100 கிராம்

முந்திரிப் பருப்பு – 10

காய்ந்த திராட்சை – 10

ஏலக்காய்த் தூள் – 1 மேஜைக்கரண்டி

நெய் – 4 மேஜைக்கரண்டி

செய்முறை

பச்சரிசியை மிக்ஸ்சியில் போட்டு ஒன்றிரண்டாக பொடித்துக் கொள்ளவும்.

அரிசியை நன்கு கழுவி 3 கப் தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

கடாயில் ஒரு மேஜைக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும் முந்திரிப்பருப்பு, காய்ந்த திராட்சையைப் போட்டு வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.

அதே கடாயில் ஒரு மேஜைக்கரண்டி நெய் ஊற்றி தேங்காய்த் துருவலை சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ளவும்.

ஊறவைத்த அரிசி மற்றும் தண்ணீரை குக்கரில் ஊற்றி பானையில் வேக வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் 50 மில்லி தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும். தண்ணீர் கொதித்து வெல்லம் நன்றாக கரைந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு வெல்லப் பாகை வடிகட்டிக் கொள்ளவும்.

வேகவைத்த சாதத்துடன் வெல்லப்பாகை ஊற்றி நன்கு கிளறிவிட்டு அடுப்பை ஆன் செய்து சிம்மில் வைக்கவும். பின்னர் முந்திரிப்பருப்பு, காய்ந்த திராட்சையைப் போட்டு கிளறி மீதமுள்ள நெய், ஏலக்காய்த்தூள், தேங்காய்த் துருவலைப் போட்டு நன்கு கிளறி கட்டியாக ஆனதும் இறக்கி விடவும். சுவையான சர்க்கரைப் பொங்கல் ரெடி.

குறிப்புகள்

அரிசியை 3 கப் தண்ணீர் சேர்த்து வேகவைப்பதற்குப் பதிலாக தேங்காய்ப் பால் 2 கப் மற்றும் 1 கப் தண்ணீர் சேர்த்தும் வேக வைக்கலாம். இவ்வாறு செய்யும்போது தேங்காய்த் துருவலைத் தவிர்த்துவிடலாம்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

திங்கள் 15 ஜன 2018