மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 14 ஜன 2018

ஆண்டாளை பெருமைப்படுத்துவதே நோக்கம்!

ஆண்டாளை பெருமைப்படுத்துவதே நோக்கம்!

ஆண்டாள் குறித்து தான் கூறிய கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாகவும், ஆண்டாளை பெருமைப்படுத்துவதே தனது நோக்கம் என்றும் கவிஞர் வைரமுத்து மீண்டும் ஒருமுறை விளக்கம் அளித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய கவிஞர் வைரமுத்து, ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியதாக தகவல் வெளியாகியது. இதற்கு விளக்கம் அளித்த வைரமுத்து,"இண்டியானா பல்கலைக்கழகத்தின் ஆய்வு நூலில் சொல்லப்பட்டிருந்த ஒரு வரியைத்தான் நான் மேற்கோள் காட்டியிருந்தேன், என்னுடைய கருத்தால் எவரையும் புண்படுத்துவது என் நோக்கமல்ல, புண்பட்டிருந்தால் வருந்துகிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் இந்து அமைப்புகள் வைரமுத்துவுக்கு எதிராக தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர். இந்து அமைப்பினர் கொடுத்த புகாரின்பேரில் வைரமுத்து மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆண்டாள் குறித்து தான் கூறிய கருத்துக்கு மீண்டுமொருமுறை வைரமுத்து விளக்கம் அளித்துள்ளார்.

"தமிழை ஆண்டாள் என்ற என் கட்டுரையில் ஆராய்ச்சியாளர்கள் மேற்கோள் காட்டிய ஒரு வரியின் ஒரு சொல் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது,பரப்பப்பட்டும் இருக்கிறது. அருள் கூர்ந்து அந்தக் கட்டுரை முழுவதையும் தவறாமல் நீங்கள் படிக்க வேண்டும்.தேவதாசி என்பது ஆண்டாள் காலத்தில் மிக மிக உயர்ந்த பொருளில் வழங்கப்பட்ட வார்த்தை. கடவுளுக்கு மட்டுமே சேவை செய்வதற்காகத் தம் மொத்த வாழ்வையும் ஒப்படைத்துக்கொண்ட உயர்ந்த பெண்களுக்கே தேவரடியார் அல்லது தேவதாசி என்ற திருப்பெயர்கள் வழங்கப்பட்டு வந்தன. ஆண்டாள் காலத்தில் உயர்பொருளில் வழங்கப்பட்ட சொல் பிற்காலத்தில் பொருள் மாற்றம் பெற்றுவிட்டது. பிற்காலப் பொருளைக் கொண்டு அக்காலச் சொல்லைப் புரிந்துகொள்ளக் கூடாது" என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ் இலக்கியத்தில் தடம் பதித்த பேராளுமைகளை இலக்கிய முன்னோடிகள் என்ற வரிசையில் தனியார் நாளிதழிழ் எழுதி வருகிறேன். அந்த வரிசையில் ஆண்டாளின் பெருமையும் எழுத நினைத்தேன் என்றும் கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர் தன்னுடைய அறிக்கையில், "ஆண்டாளைப் பற்றி மூன்று மாதங்கள் அரிய நூல்களைப் படித்துத் தகவல் திரட்டிய நான் "Indian Movements : Some Aspects of Dissent, Protest and Reform" என்ற சுபாஷ் சந்திர மாலிக் தொகுத்து அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட ஆங்கில ஆராய்ச்சிக் கட்டுரைத் தொகுப்பு நூலையும் படித்தேன். அதில் "Bhakti Movement in South India" என்ற கட்டுரையைக் கண்ணுற்றேன். அந்தக் கட்டுரை பேராசிரியர் நாராயணன், பேராசிரியர் கேசவன் என்ற அறிஞர் பெருமக்களால் எழுதப்பட்டது. அந்தக் கட்டுரையின் ஒரே ஒரு வரியைத் தான் நான் மேற்கோளாக எடுத்தாண்டிருந்தேன்.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

ஞாயிறு 14 ஜன 2018