மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 14 ஜன 2018

ஆட்சியைக் கவிழ்க்கும் கனவு நிறைவேறவில்லை!

ஆட்சியைக் கவிழ்க்கும் கனவு நிறைவேறவில்லை!

அதிமுக கட்சியை உடைக்கவும், ஆட்சியைக் கவிழ்க்கவும் நினைத்தனர். ஆனால் அவர்களின் கனவு நிறைவேறவில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சேலம் சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்கு பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டு திட்டங்களைத் துவக்கி வைத்து வருகிறார். உள்ளாட்சித் தேர்தலை விரைவில் வரவுள்ள நிலையில், சேலம் மாவட்ட அதிமுக ஊராட்சி கழக நிர்வாகிகள் கூட்டம் ஓமலூரில் இன்று (ஜனவரி 14) நடைபெற்றது. நிகழ்வில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

"காவிரி நதிநீரைப் பங்கிடுவது தொடர்பான வழக்கில் இன்னும் நான்கு வாரங்களுக்குள் தீர்ப்பு வரும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர். தீர்ப்பு தமிழகத்துக்கு சாதகமாக வரும் என்று எதிர்பார்க்கிறோம். இருப்பினும் தற்போது மேட்டூர் ஆணையின் நீர்மட்டம் குறைவாக இருக்கும் காரணத்தால், உடனடியாக 7 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக முதல்வருக்குக் கடிதம் எழுதினேன்" என்று அவர் கூறினார்.

மேலும் அவர், "தமிழகத்தில் மதச்சார்பற்ற அரசுதான் உள்ளது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. நாடாளுமன்றத்தில் முத்தலாக் சட்ட மசோதா வந்தபோது சட்டத்தில் 3 வருடம் சிறை தண்டனை என்பதை திருத்தம் செய்ய வேண்டும் என்று முதலில் குரல் கொடுத்தது நாங்கள்தான். இதுகுறித்து இரு அவைகளிலும் நாங்கள் பேசினோம். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக கட்சியை உடைக்கவும், ஆட்சியைக் கவிழ்க்கவும் முயற்சி செய்தனர், ஆனால் அவர்களின் கனவு நிறைவேறவில்லை. அதனால் எதையாவது சொல்கிறார்கள். எங்கள் இயக்கம் மதச்சார்பற்ற இயக்கம் தான்" என்றும் தெரிவித்துள்ளார்.

இன்றைய கூட்டத்தில் 386 ஊராட்சி செயலாளர்கள் கலந்துக்கொண்டனர். 15 பேர் வரை மட்டுமே வரவில்லை, உடல் நலம் சரியில்லாத காரணத்தால் அவர்கள் வரவில்லை என்று கூறியுள்ளனர். கட்சியின் அடித்தளமே ஊராட்சி செயலாளர்கள்தான், அவர்கள் அனைவரும் அதிமுகவில் எங்கள் பக்கம் இருக்கின்றனர் என்று கூறிய முதல்வர், தினகரனை ஊடகங்கள்தான் தூக்கிப் பிடிக்கின்றனர். நாங்கள் பேசினால் இரண்டு நிமிடம் மட்டும் போட்டுவிட்டு, தினகரன் பேசினால் 40 நிமிடம் காட்டுகிறீர்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

ஞாயிறு 14 ஜன 2018