மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 14 ஜன 2018

ஜல்லிக்கட்டு: 54 வீரர்கள் காயம்!

ஜல்லிக்கட்டு: 54 வீரர்கள் காயம்!

இன்று (ஜனவரி 14) காலை கோலாகலமாக தொடங்கிய அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 54 மாடுபிடி வீரர்கள் காயமடைந்தனர்.

புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று தொடங்கியது. 954 காளைகளுடன் 623 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். காலை 8 மணிக்கு வாடிவாசல் திறக்கப்பட்டது. ஜல்லிக்கட்டை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அமைச்சர் செல்லூர் ராஜு ஆகியோர் தொடங்கி வைத்தனர். மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு போட்டியின்போது மாடுகளைத் துன்புறுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுத்தனர்.

முதலாவதாகக் கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் அடக்கி வெற்றி பெற்றனர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்க காசு, வெள்ளி காசு, தங்க செயின், டிவி, ஃபிர்ட்ஜ், சைக்கிள், கட்டில், பீரோ, வாஷிங் மெஷின், அண்டா, வெள்ளி குத்து விளக்கு என பல்வேறு பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன.

மூன்று வயதுக்கு மேற்பட்ட காளைகள் மட்டுமே ஜல்லிக்கட்டில் அனுமதிக்கப்படும். வாடிவாசலில் இருந்து அவிழ்த்துவிடப்படும் காளைகளை வீரர்கள் முதல் 15 மீட்டர் தூரம் அல்லது 50 ச.மீ. பரப்பளவுக்குள், 30 நொடிகளுக்குள் அடக்க வேண்டும். அதுவும் 3 துள்ளல் வரை மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். மேற்குறிப்பிட்ட தொலைவுக்குள் காளைகளை பிடித்தால் மட்டுமே அவை அடக்கப்பட்டதாகக் கருதப்படும். இந்த 50 அடி தூரம் வரை 8 அடி உயரத்துக்கு இரட்டைப் பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும். வீரர்கள் காளைகளின் வால், கொம்புகள், கால்களை பிடிக்கக் கூடாது. காலை 8 மணிக்கு மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் என கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த பரிசோதனைகளைக் கடந்து 954 காளைகளும், 623 மாடுபிடி வீரர்களும் ஜல்லிக்கட்டில் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டு சுமூகமாக நடைபெற்றதாலும், அவிழ்த்துவிடப்படாத காளைகள் இருந்ததாலும் 3 மணிக்கு முடிக்க வேண்டிய ஜல்லிக்கட்டு போட்டி 4 மணி வரை நீட்டிக்கப்பட்டது. 4 மணிக்கு போட்டி நிறைவு செய்யப்பட்டது. 954க்கும் அதிகமான வீரர்கள் மாடு பிடிக்க பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் 6 சுற்றுகளாக 470 வீரர்கள் மாடு பிடிக்க அனுமதிக்கப்பட்டனர். போட்டியில் சிறப்பாக செயல்பட்ட மாடுபிடி வீரர்கள் 5 பேருக்கும், 5 காளை உரிமையாளா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்தப் போட்டியில் மொத்தமாக 54 மாடுபிடி வீரர்கள் காயமடைந்தனர்.மருத்துவக்குழு, மீட்புக்குழுவினர் வாடி வாசல் அருகே தயார் நிலையில் இருந்தனர். அவர்கள் காயம் அடைந்த வீரர்களுக்கு முதற்கட்ட சிகிச்சை அளித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை என மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

ஞாயிறு 14 ஜன 2018