மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 14 ஜன 2018

இந்தியாவை மிரட்டும் பாகிஸ்தான் அமைச்சர்!

இந்தியாவை மிரட்டும் பாகிஸ்தான் அமைச்சர்!

இந்தியாவுக்கு மிரட்டல் விடுக்கும் விதமாக அணு ஆயுதத்தை சோதனை செய்ய தயார் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் நேற்று (ஜனவரி 13) மிரட்டல் விடுத்துள்ளார்.

கடந்த 12ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய இந்திய ராணுவத் தளபதி பிபின் ராவத், "இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் அதிகரித்தால் பாகிஸ்தான் ராணுவம் அணு ஆயுதத்தை உபயோகிக்குமா? என்ற கேள்விக்கு, இது பாகிஸ்தானின் நியூக்ளியர் ப்ளஃப் . அரசு கேட்டுக் கொண்டால் எல்லைத் தாண்டி எந்தவிதமான நடவடிக்கையிலும் இறங்க நம் ராணுவம் தயாராக இருக்கிறது" என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் நேற்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் தனது ட்விட்டர் பக்கத்தில் , "இந்திய ராணுவத் தளபதி மிக பொறுப்பற்றத்தனமாக ஒரு பதிலை கூறியுள்ளார். அவரது பதவிக்கு ஏற்றாற் போல் அவர் நடந்துகொள்ளவில்லை. இது அணு ஆயுதத்தைப் பயன்படுத்துவதற்கு வழிகோலும். அதுதான் விருப்பமென்றால், அணு ஆயுதத்தை சோதனை செய்ய நாங்கள் தயார். அப்படிச் செய்வதன் மூலம், தளபதியின் சந்தேகங்கள் தீர்க்கப்படும்" என்று பதிவிட்டுள்ளார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

ஞாயிறு 14 ஜன 2018