மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 14 ஜன 2018

மகர ஜோதியை தரிசிக்க குவிந்த பக்தர்கள்!

மகர ஜோதியை தரிசிக்க குவிந்த பக்தர்கள்!

சபரிமலை ஐயப்பன் கோயிலில், இன்று (ஜனவரி 14) நடைபெறும் மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதியை தரிசிக்க லட்சக் கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர விளக்கு பூஜையை முன்னிட்டு 2017 டிசம்பர் மாதம் 30ஆம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 31ஆம் அதிகாலை 3மணிக்கு நடை திறக்கப்பட்டு விசே‌ஷ பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர், நாள்தோறும் சாமிக்கு நெய் அபிஷேகம், புஷ்பாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகள் நடைபெற்றுவந்தன.

மகர விளக்கு பூஜையின்போது சாமி ஐயப்பனுக்குத் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்படும். அதற்காகத் திருவாபரணங்களை ஊர்வலமாக எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி பந்தளம் கொட்டாரத்தில் நேற்று முன் தினம் (ஜனவரி 12) தொடங்கியது. சாமியின் நகைகள் வைத்திருக்கும் பெட்டகங்கள் பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோயிலுக்குக் கொண்டுவரப்பட்டு, நேற்று (ஜனவரி 13) சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டது. பந்தளத்தில் இருந்து புறப்பட்ட திரு ஆபரண பவனி, இன்று சரங்குத்தி வந்தடைந்தது. திருவிதாங்கூர் தேவசம் போர்டு அதிகாரிகள் அதை வரவேற்று, சன்னிதானத்துக்குக் கொண்டு வந்தனர். தந்திரியும், மேல்சாந்தியும் ஆபரணத்தைப் பெற்று, 6.35 மணி அளவில் அய்யப்பனுக்கு அணிவித்தனர். மாலை 6.45 மணிக்கு சரண கோஷங்களை எழுப்பியபடி லட்சக்கணக்கான பக்தர்கள் மகர ஜோதியை தரிசித்தனர்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

ஞாயிறு 14 ஜன 2018