மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 14 ஜன 2018

எச்.ராஜா ஸ்டேட்டஸ்ல தான் பொங்கல்! : அப்டேட்குமாரு

எச்.ராஜா ஸ்டேட்டஸ்ல தான் பொங்கல்! : அப்டேட்குமாரு

“பொங்கல் அதுவுமா எல்லாரும் காலையிலயே பொங்கல் வச்சு சாப்பிட்டுட்டு டிவியில படத்தை பார்த்த மாதிரியே தூங்கி எந்திரிப்பாங்க, நமக்கு எண்டர்டெய்னே ஆகாது”ன்னு பார்த்தா நமக்குன்னு வந்து சிக்குறாரு எச்.ராஜா. ஆண்டாள் மேட்டருக்கு பொங்கல் அதுவுமா லீவு விட்டுட்டு ஆராய்ச்சியில இறங்கிட்டாரு. தை மாசத்துல இருந்து சூரியன் வடக்கு முகமா சுத்துமாம். இப்படி ஒரு ஆராய்ச்சி முடிவை அவர் வெளியிட்ட உடனே நம்ம நெட்டிசன்ஸ்லாம் சேர்ந்து அவர் டைம்லைன்ல தான் பொங்கல் வைக்குறாங்க. சென்சார் பிரச்னை வந்துட கூடாதுங்குறதுக்காக தான் அதை பார்த்துட்டு மட்டும் வந்துட்டேன். அதுல ஒருத்தர், “சும்மா சும்மா சுத்திக்கின்னு இருக்க அதென்ன மோடியா?”ன்னு கேட்டுட்டார். அதுக்கு மேல கேட்டதை நான் சொல்லமாட்டேன். நல்ல நாள் அதுவுமா அவரோட தலைவருக்கும் சேர்த்து வாழ்த்து வாங்கி கொடுக்குறாரே.. ப்பா என்ன மனுஷன் சார் சான்ஸே இல்ல.

@sultan_Twitz

காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது - சித்தராமையா #

சூப்பர் ஸ்டார் கன்னடத்துல பேசி காவிரி நீர் வாங்கி தருவாருன்னு சொன்னவன யாராவது பாத்தீங்களா.

@Mugavarii

கிறிஸ்துமஸ்க்கும், ரம்ஜானுக்கும் பிரியானிய வாளி வாளியா கொடுத்த சக நண்பர்களுக்கு..

எங்களால பொங்கலை தான் தர முடியுதுன்னு நினைக்குறப்போ..

@Sathik_143

முன்னலா வீட்டு வாசல்ல பொண்ணுங்க கோலத்த போட்டு மார்க் கேப்பாங்க இங்க ஆர்டி கேக்ராய்ங்க இதா டிஜிட்டல் இந்தியாவோ ஹம் ...!

@ajmalnks

மெர்சல் படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்களை காரணமாகவே பேசினேன் - நடிகர் விஜய்

இந்த அடி போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமான்னு கேட்கிறாரு தளபதி...

@SKTWTZ

திமுக ஆட்சிக்கு வரும்போது, தை முதல் நாள் தமிழ் புத்தாண்டு என சட்டமாக்கப்படும் - ஸ்டாலின்

இனிமேல் மக்கள்தான் காலண்டர் மாத்தனும்..

திமுக வந்தால் தை மாசம்

அதிமுக வந்தால் சித்திரை மாசம் ன்னு..

@HAJAMYDEENNKS

பட இடைவேளைக்கு பிறகு விளம்பரங்கள் தொடரும் - பண்டிகை கால டிவி அட்ராசிட்டிகள் !

@Kozhiyaar

தெரியாத கேள்வியை கேட்டுவிட்டு, ஒரு நமட்டுச் சிரிப்பு சிரிக்கும் வாத்தியார் போலவே நடத்துகிறது வாழ்க்கை!!!

@chithradevi_91|

ஜிம்முக்கு புதுசா போற பசங்கள ஈசியா கண்டுபிடிச்சிடலாம்..இரண்டு கைலயும் சாம்பார் வாளிய தூக்கிட்டு நடக்கற மாதிரியே நடக்கறாங்க

@HAJAMYDEENNKS

டிவியில ஒரே நாளில் பல படங்களை பார்த்துவிலாம் என்பதுதான் இன்றைய பண்டிகை கால கொண்டாட்டங்கள்...!

@muji

தை பிறக்கப் போகிறது

நிச்சயமாக நல்ல வழி பிறக்கப் போகிறது

ஸ்டாலின்

எந்த வருடம்னு சொல்லாமல் போய்ட்டாரே

@I_arasu403

எங்க வீட்டு பொங்கல்

எங்க வீட்டு கோலம்

எங்க வீட்டு அடுப்பு

எங்க வீட்டு கரும்பு

நிறுத்துங்கடா..,

முடியல போதும்டா சாமி

@Thaadikkaran

தலைக்கனம் ஹைஹீல்ஸ் மாதிரி உயர்த்துல இருக்குறே மாதிரி காமிக்கும் தடுக்கி விழுந்தோம் அல்லு சில்லு சிதறிடும்..!

@Ramesh_twitz

பொங்கல் சட்டில வைச்ச காலம் போய்..,

ஸ்டேடஸ்ல வைக்கிற காலம் வந்துருச்சு..!!!

@nithyad

ரேஷன் கடைகளில் உளுத்தம் பருப்பு வழங்கமுடியாது..! செல்லூர் ராஜூ உறுதி

ஏன் தலைவரே அதுக்கு பதிலா பாதம் பிஸ்தான்னு போட போறிங்களா

@nandhu_twitts

அன்புக்காக குடை பிடித்தீர்கள் என்றால்,

வேறு எந்த வம்புக்காகவும் படை எடுக்க மாட்டீர்கள்..!

@skpkaruna

அட! என்ன இது? மெர்சல்லேயும் விஜய் கிரிக்கெட் விளையாடுறார்? பட் பைரவாலே பேட்டிங்., மெர்சல்லே பவுலிங். மொத்தத்துலே ஒரு ஆல்ரவுண்டர்

@RJAadhi

நாளை தை முதல் நாள். சூரியன் வடக்கு முகமாக சுற்றத துவங்கும். - எச்.ராஜா

ஏது சூரியன் சுத்துமா???? சும்மா சுத்தினே இருக்க அதென்ன மோடியா???

@mufthimohamed1

இன்னைக்கி மட்டும்தான் அடுப்புல வச்ச பாலும்,சோறும் பொங்கினா அம்மா சிரிக்கும்,

நாளைக்கி சுடுதண்ணி கொதிச்சா கூட அம்மா அடிக்கும்.

@vishnut87

அம்மா பொங்கல் வச்சிடியா மா..??

வச்சிடேன் டா.. 4விசில் வந்ததும் ஆப் பன்னுடா..!!

நகர்புறத்து_பொங்கல்

@Kartiktweaks

நானே ஞாயித்திகிழம கறிசோறு திங்கமுடியலையேன்ற கடுப்புல இருக்கேன்..இதுல வந்துகிட்டு ஹாப்பி பொங்கலாம் போவியா..!!

@HAJAMYDEENNKS

காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது - சித்தராமையா #

அப்படியே மைக்கை ரஜினிக்கிட்ட கொடுங்க...!

@Kozhiyaar

எந்த கட்டப்பாவையும் எட்டப்பாவாக மாற்ற பணத்தால் முடிகிறது!!!

@punithanadv

காந்தி சுட்டுக் கொல்லப்பட்டபோது மௌண்ட் பேட்டன் கூறினாராம்

'கடவுளுக்கு நன்றி

கொன்றவன் முஸ்லிம் இல்லை'

உச்சநீதிமன்ற நான்கு நீதிபதிகள் பேட்டியிலும் பொருந்துகிறது

நல்லவேளை, நால்வரில் ஒருவரும் முஸ்லிம் இல்லை

-லாக் ஆஃப்

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

ஞாயிறு 14 ஜன 2018