சிறுநீரகத்தில் துணி: மருத்துவர்கள் மீது புகார்!


சிறுவனின் சிறுநீரகத்தில் துணி, பஞ்சு வைத்து கவனக்குறைவாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகர காவல் ஆணையரிடம், திண்டுக்கல் மாவட்டம் சண்முகபுரத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார் இந்தப் புகார் மனுவை அளித்துள்ளார்.
அதில், "எனது நான்கரை வயது மகன் விஷ்ணு, வயிற்று வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். இந்நிலையில் ராம்நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் விஷ்ணுவை சேர்த்தோம். இதையடுத்து, அவனது சிறுநீரகம் சிறியதாக உள்ளதாகக் கூறி, கடந்த செப்டம்பர் மாதம் அறுவைசிகிச்சை செய்தனர். இந்தச் சிகிச்சைக்கு ரூபாய் 20 லட்சம் செலவானது.
அதன்பின்னர், சிகிச்சை முடிந்து வீடு திரும்பியபோதும் விஷ்ணுவுக்கு வயிற்று வலி சரியாகவில்லை. மேலும், சிறுநீர் கழிக்க முடியாமலும் அவதிப்பட்டான். மீண்டும் அதே மருத்துவமனையில் ஸ்கேன் செய்து பார்த்தபோது, சிறுநீரகம் வீங்கியிருப்பது தெரியவந்தது. மருந்து, மாத்திரை சாப்பிட்டால் சரியாகிவிடும் என்று கூறி மருத்துவர்கள், எங்களை திருப்பிஅனுப்பினர்.