மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 14 ஜன 2018

தாவர எண்ணெய் இறக்குமதி சரிவு!

தாவர எண்ணெய் இறக்குமதி சரிவு!

இந்தியாவின் தாவர எண்ணெய் இறக்குமதி டிசம்பரில் 10 சதவிகிதம் சரிவு கண்டுள்ளது.

இதுகுறித்து சால்வண்ட் எக்ஸ்ட்ராக்டர்ஸ் கூட்டமைப்பு (SEA) வெள்ளிக்கிழமை (ஜனவரி 12) வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியா டிசம்பர் மாதத்தில் 79,250 டன் அளவிலான தாவர எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே பருவத்தில் இறக்குமதி செய்யப்பட்ட தாவர எண்ணெய்யை விட 10 சதவிகிதம் குறைவாகும். 2017ஆம் ஆண்டு நவம்பரில், கச்சா பாமாயில் இறக்குமதிக்கு 30 சதவிகித வரி விதிக்கப்பட்டது. அதேபோல சுத்திகரிப்பு செய்யப்பட்ட பாமாயிலிற்கு 40 சதவிகிதம் இறக்குமதி வரி விதிக்கப்பட்டது.

இதற்கு முன்னர் இறக்குமதி செய்யப்படும் பாமாயிலுக்கு 25 சதவிகித வரி விதிக்கப்பட்டிருந்தது. உள்நாட்டு விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் முயற்சியாக இந்த வரி உயர்வு விதிக்கப்பட்டது. இதனால் டிசம்பர் மாதத்தில் பாமாயில் இறக்குமதி சரிந்தது. டிசம்பர் மாதத்தில் 722,857 டன் பாமாயில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டு டிசம்பர் மாதத்தில் 723,158 டன் பாமாயில் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது" என்று கூறப்பட்டுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

ஞாயிறு 14 ஜன 2018