இந்தியா வந்த இஸ்ரேல் பிரதமர்!


இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு ஆறுநாள் அரசு முறைப்பயணமாக இன்று (ஜனவரி 14) காலை இந்தியா வந்தடைந்தார்.
இந்தியா-இஸ்ரேல் நட்புறவின் 25 ஆம் ஆண்டு நிறைவையொட்டி இந்திய பிரதமர் நரேந்திரமோடி கடந்த ஆண்டு ஜூலையில் மூன்றுநாள் அரசு முறைப் பயணமாக இஸ்ரேல் சென்றிருந்தார். இதன் மூலம் இஸ்ரேல் சென்ற முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையையும் மோடி பெற்றார். இந்த பயணத்தின் போது மேக் இன் இந்தியா தொடர்பான பல்வறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு ஆறுநாள் அரசு முறைப் பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார். டெல்லி விமான நிலையத்தில் பிரதமர் மோடி அவரை நேரில் வரவேற்றார். அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இஸ்ரேல் பிரதமருடன், தொழில்நுட்பவியலாளர்கள், வர்த்தகர்களைக் கொண்ட 130 பேர் குழுவும் வந்திறங்கியது. முதலாம் உலகப் போரில் உயிரிழந்த ராணுவ வீரர்கள் நினைவாக அமைக்கப்பட்டுள்ள டீன் முர்த்தி நினைவிடத்தில் இஸ்ரேல் பிரதமரும், பிரதமர் மோடியும் அஞ்சலி செலுத்தினர்.
இதை தொடர்ந்து பிரதமர் மோடி மற்றும் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து பெஞ்சமின் நெதன்யாஹு பேச்சுவார்த்தை நடத்தினார். நாளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை பெஞ்சமின் நெதன்யாஹு சந்தித்து பேசுகிறார்