மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 14 ஜன 2018

தடம் பதிக்கும் அருண் விஜய்

தடம் பதிக்கும் அருண் விஜய்

அருண் விஜய் நடிப்பில் உருவாகிவரும் தடம் திரைப்படத்தின் டீசர் நேற்று (ஜனவரி 13) வெளியாகியுள்ளது.

முன்தினம் பார்த்தேனே, மீகாமன், தடையற தாக்க ஆகிய படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கும் படம் தடம். அருண் விஜய் கதாநாயகனாக நடிக்க தன்யா ஹோப் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். சஸ்பென்ஸ் த்ரில்லர் பாணியில் உண்மைச்சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகிவருகிறது. குற்றப்புலனாய்வில் இயல்பாக உள்ள சுவாரஸ்யத்தை பார்வையாளர்களுக்கு கடத்தும் விதத்தில் படம் உருவாகிவருவதை டீசரை பார்க்கும்போது உணர முடிகிறது. ஆவணப்பட பாணியில் ஆரம்பிக்கும் டீசர் ஆர்வத்தை கூட்டுவதாக உள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன்னர் மின்னம்பலம் சார்பாக இயக்குநர் மகிழ்திருமேனியை பேட்டி கண்டபோது, “‘ உலகத்தில் நடைபெறும் குற்றங்களில் தடயமே இல்லாத பெர்பக்ட் கிரைம் எனபது கிடையாது. ஏதாவது ஒரு முக்கிய தடயத்தை குற்றம் செய்தவர் அவருக்கே தெரியாமல் விட்டு சென்றிருப்பார். அந்த தடயத்தை முதலில் புத்திசாலியாக புலனாய்வு செய்பவர் கண்டறிந்து விடுவார். கண்டறிந்து விட்டால் குற்றம் செய்தவரை எளிதாக கண்டுபிடித்துவிடலாம்” என்று கூறியிருந்தார். இதே வரிகளை டீசரில் ஒரு கதாபாத்திரம் பேசுகிறது.

தடையற தாக்க மூலம் அருண் விஜய்க்கு மிகப்பெரிய வெற்றியை தேடித்தந்த மகிழ்திருமேனி இந்த படத்திலும் அதை தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

ஞாயிறு 14 ஜன 2018