மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 14 ஜன 2018

71 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து!

71 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து!

தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட 71 லட்சம் குழந்தைகளுக்கு முதல் தவணை போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் ஜனவரி 28ஆம் தேதி நடைபெறவுள்ளது.

‘போலியோ வைரஸ்’ ஏற்படுத்துகின்ற தொற்றுநோய் தான் இளம்பிள்ளைவாதம். இந்த நோய் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அதிகமாக பாதிக்கிறது. குறிப்பாக, குழந்தைகளின் கை, கால் தசைகளைப் பாதித்து, அவற்றின் இயங்கும் சக்தியை இழக்கச் செய்கிறது. எனவே ஆண்டுதோறும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இரண்டு தவணைகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான முதல் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் ஜனவரி 28ஆம் தேதி நடைபெறவுள்ளது. மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் என 43,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதேபோல், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் 1,652 மையங்கள் அமைக்கப்படுகின்றன. மேலும், 1,000 நடமாடும் குழுக்கள் மற்றும் 3,000 வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் ஈரோடு உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்குத் தேவையான போலியோ சொட்டு மருந்துகள், மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இருந்து, ஜனவரி 9ஆம் தேதி கொண்டு வரப்பட்டது. சேலத்திற்கு வந்த இந்த மருந்துகள், வானங்கள் மூலம் மற்ற மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டது. இதில் 8 மாவட்டங்களைச் சேர்ந்த 21,87,800 குழந்தைகளுக்குத் தேவையான மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.

குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியில் சுகாதாரப் பணியாளர்கள், கிராமப்புற செவிலியர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் என 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபடவுள்ளனர்.

பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி, ‘தமிழகம் போலியோ இல்லாத நிலையை அடைந்துள்ளது. குழந்தைகளைப் போலியோ பாதிப்பிலிருந்து பாதுகாக்க போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. எனவே, இந்த முகாமை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். விடுபட்ட குழந்தைகளைக் கண்டுபிடிக்க போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்ட குழந்தைகளின் கை விரலில் மை வைக்கப்படும். இரண்டாம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் வரும் மார்ச் 11ஆம் தேதி நடைபெறவுள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

ஞாயிறு 14 ஜன 2018