மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 14 ஜன 2018

சீனாவுக்கு இறக்குமதி குவிப்பு வரி!

சீனாவுக்கு இறக்குமதி குவிப்பு வரி!

இறக்குமதி செய்யப்படும் சோலார் தகடுகளுக்கு இறக்குமதிக் குவிப்பு வரியை விதிக்க வேண்டுமென்று அனைத்திந்திய சோலார் தொழிற்துறை கூட்டமைப்பு (ஏ.ஐ.எஸ்.ஐ.ஏ.)கோரிக்கை விடுத்துள்ளது.

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களைப் பேருக்கும் வகையில் இந்தியாவில் சோலார் மின் உற்பத்தி நிலையங்கள் மூலமான மின் உற்பத்தி சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் சோலார் மின் உற்பத்தி நிலையங்களுக்குப் போதுமான அளவில் சோலார் தகடுகள் மற்றும் இதர பொருட்கள் தயாரிக்கப்படுவதில்லை. இதனால் பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது.

குறிப்பாக சீனாவிலிருந்து தான் சோலார் மின் நிலையம் அமைக்கத் தேவையானப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகிறது. சீனாவில் மலிவான விலைக்கு சோலார் பொருட்கள் கிடப்பதால் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. இது இந்திய உற்பத்தியாளர்களை கடுமையாகப் பாதிப்பதாக இந்திய சோலார் பொருட்கள் தயாரிப்புக் கூட்டமைப்பினர் கூறுகின்றனர்.

ஏ.ஐ.எஸ்.ஐ.ஏ.வின் பொதுச் செயலாளர் கையனேஷ் சவுத்ரி கூஉகையில், "வெளிநாடுகளிலிருந்து சோலார் பொருட்கள் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுவதால் இந்திய சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. இந்திய சோலார் உற்பத்தித் துறையைப் பாதுகாக்க சீன இறக்குமதி சோலார் பொருட்களுக்கு இறக்குமதிக் குவிப்பு வரியை விதியை வேண்டும்" என்றார்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

ஞாயிறு 14 ஜன 2018