மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 14 ஜன 2018

தொண்டர்கள் சந்திப்பு: கருணாநிதி உற்சாகம்!

தொண்டர்கள் சந்திப்பு: கருணாநிதி உற்சாகம்!

பொங்கல் திருநாளை முன்னிட்டு திமுக தலைவர் கருணாநிதி தனது இல்லத்தின் முன் திரண்டிருந்த தொண்டர்களைச் சந்தித்தார்.

பொங்கல் திருநாளின்போது திமுக தலைவர் கருணாநிதி தொண்டர்களைச் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பது வழக்கம். அப்போது, தொண்டர்களுக்கு 10 ரூபாய் நோட்டையும் அவர் வழங்குவார். கடந்த ஆண்டு, உடல்நலக் குறைவு காரணமாக அவர் தொண்டர்களைச் சந்திக்கவில்லை. இந்த நிலையில், கருணாநிதியின் உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் அவர் இன்று (ஜனவரி 14) தொண்டர்களைச் சந்திப்பார் என்று தகவல் வெளியாகியிருந்தது. இதையடுத்து கோபாலபுரம் இல்லம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.

இன்று காலை முதலே தொண்டர்கள் அவரது இல்லத்தில் முன் திரண்டனர். காலை 10.50 மணியளவில் தனது இல்லத்தின் முன் திரண்டு இருந்த தொண்டர்களைச் கருணாநிதி சந்தித்தார். அவர்களை நோக்கி கையசைத்ததுடன் சிரிப்பையும் உதிர்த்து தனது மகிழ்ச்சியை அவர் வெளிப்படுத்தினார். அவரைப் பார்த்ததும் தொண்டர்கள் உற்சாக கோஷம் எழுப்பினர். இந்தச் சந்திப்பின்போது முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் இருந்தனர்.

பின்னர் ஸ்டாலின், கனிமொழி, ஆ.ராசா, வைரமுத்து உட்பட பலரும் கோபாலபுரம் இல்லத்துக்கு வந்து கருணாநிதியிடம் வாழ்த்துப் பெற்றனர்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

ஞாயிறு 14 ஜன 2018