மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 14 ஜன 2018

கொள்ளையன் நாதுராம் கைது!

கொள்ளையன் நாதுராம் கைது!

கொளத்தூரில் உள்ள நகைக்கடையில் நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றைக் கொள்ளையடித்த நாதுராம் குஜராத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை கொளத்தூரில் முகேஷ்குமார் என்பவரின் நகைக்கடையில் 3.5 கிலோ தங்கம், 4 கிலோ வெள்ளி, ரொக்கப் பணம் ரூ.2 லட்சம் கொள்ளை போனது. மேற்கூரையில் துளையிட்டுத் திருடப்பட்ட இந்த வழக்கில் நான்கு வடமாநில ஆசாமிகள் கைது செய்யப்பட்டனர். நாதுராம் மற்றும் அவரது கூட்டாளி தினேஷ் சௌத்ரி ராஜஸ்தானுக்குத் தப்பிச் சென்றனர். இவர்களைப் பிடிப்பதற்காக பெரிய பாண்டியன், முனிசேகர் தலைமையில் ஆறு பேர் கொண்ட தனிப்படை கடந்த டிசம்பர் 8ஆம் தேதி ராஜஸ்தான் சென்றது.

டிசம்பர் 13ஆம் தேதி கொள்ளையர்களை நெருங்கும்போது ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்டார். முதலில் இந்தக் கொள்ளை சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான நாதுராம் தான் சுட்டிருக்க வேண்டும் என்று கூறப்பட்டது. பின்பு, பெரியபாண்டியின் உடலில் பாய்ந்த குண்டு உடன் சென்றிருந்த ஆய்வாளர் முனிசேகருடையது என்று ராஜஸ்தான் மாநிலத்தின் பாலி மாவட்ட எஸ்பி தீபக் பார்கவ் கூறியிருந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக முனிசேகர், பெரியபாண்டியனின் குடும்பத்தாரைச் சந்தித்து மன்னிப்பு கேட்டார். எனினும், பெரியபாண்டியன் மரணம் தொடர்பான மர்மம் இன்னும் நீடித்துவருகிறது.

இதற்கிடையே, துப்பாக்கியுடன் நாதுராம் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப் புகைப்படங்களை அவரே தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் நாதுராமைப் பிடிக்க வண்ணாரப்பேட்டை காவல் ஆய்வாளர் ஜவஹர் மற்றும் தலைமைக் காவலர் அந்தஸ்தில் உள்ள திறமை வாய்ந்த போலீஸார் கொண்ட தனிப்படை ராஜஸ்தான் விரைந்தது. கொள்ளையன் நாதுராமை போலீஸார் ராஜஸ்தானில் தேடிவந்த நிலையில் நாதுராம் குஜராத்துக்குத் தப்பிச்சென்றார்.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

ஞாயிறு 14 ஜன 2018